இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசியல் பிரச்சனை காரணமாக இருநாட்டு கிரிக்கெட் தொடர்கள் சுமார் 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி சுற்றுப் பயணம் செய்தது. அதன்பிறகு ஏற்பட்ட அரசியல் காரணங்களால் இந்தியா - பாகிஸ்தான் தொடர்கள் நடத்தப்படவில்லை. தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவராக இருக்கும் ரமீஸ் ராஜா, இதற்கான முயற்சிகளை எடுத்தார். இருதரப்பு தொடர்கள் நடத்த வாய்ப்பு இல்லை என்பதால், நான்கு அணிகளுக்கு இடையிலான தொடர்களை நடத்தலாம் என்ற முன்னெடுப்பை முயற்சி செய்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | யார் இந்த சர்ஃபராஸ் கான்? விரைவில் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகம்!


ஆனால், அவரின் முயற்சிக்கும் பலன் கிடைக்கவில்லை. இதுகுறித்து பேசியிருக்கும் அவர், அரசியல் காரணங்களால் இருநாட்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவதில்லை என தெரிவித்தார். இருப்பினும் வேறு வடிவில் இருநாடுகளும் மீண்டும் கிரிக்கெட் தொடர்களில் விளையாடும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும், அந்த திட்டங்கள் கைகூடி வரவில்லை எனத் தெரிவித்தார். ஐபிஎல் தொடரை பார்க்க வருமாறு கங்குலி இருவேறு சமயங்களில் அழைத்தாக தெரிவித்த அவர், ரசிகர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்பதற்காக பங்கேற்கவில்லை எனக் கூறினார்.


ரமீஸ் ராஜா பேசும்போது, " ஐசிசி தொடர்களைக் கடந்து இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்வதில்லை. இரு நாடுகளும் தனியே தொடர்களில் மோதிக் கொள்ள வேண்டும் என்னுடைய விருப்பம். ஆனால் அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடிவரவில்லை. வரும் காலங்களில் வரும் என்றுநம்புகிறோம். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் கங்குலி இரண்டு சமயங்களில் என்னை ஐபிஎல் தொடரை பார்க்க வருமாறு அழைத்தார். ஆனால் ரசிகர்கள் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் குழப்பமான நிலையில், அந்த அழைப்பை நிராகரித்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.   


மேலும் படிக்க | IND vs ENG: புஜாரா அவுட்டை கொண்டாடிய இந்திய வீரர்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR