INDvsWI: முதல் ODI போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல்!
இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 14 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது!
இந்தியா - மேற்கிந்திய அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கும் 14 வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது!
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியா அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா தொடரை வென்றது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஒருநாள் தொடரின் முதல் போட்டில் நாளை துவங்குகிறது. இந்நியில் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் 12 பேர் கொண்ட பெயர் பட்டியலை BCCI வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலின்படி முதல் ஒருநாள் போட்டிகளில் கோலி தலையிலான அணியில் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, MS டோனி, ரிசாப் பன்ட், ரவிந்திர ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், மொகமது ஷமி, கலீல் அகமது, உமேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
5 ஒருநாள் போட்டி கொண்ட இத்தொடரின் முதல் போட்டி நாளை (அக்டோபர் 21) துவங்கி அக்டோபர் 24, அக்டோபர் 27, அக்டோபர் 29 மற்றும் நவம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. நாளை கௌஹாத்தி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.