பார்வையற்றோருக்கான 5-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் ஆறு அணிகள் இடம்பெற்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்போட்டியின் இறுதியாட்டம் நேற்று சார்ஜாவில் நடைப்பெற்றது. இதில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானுடன் மோதியது. 


டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் எடுத்தது.


309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிரங்கிய இந்தியா, 38.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 


2-வது முறையாக வாகை சூடிய இந்திய அணிக்கு இந்திய தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்தினை பகிர்ந்துள்ளனர்.