ஐபிஎல் கோப்பை வென்ற கையுடன் கல்யாணம்... நீண்டநாள் காதலியை கரம்பிடித்தார் ருதுராஜ்!
Ruturaj Gaikwad Marriage: சென்னை சூப்பர் கிங்ஸ், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவாரை நேற்று (ஜூன் 3) திருமணம் செய்து கொண்டார்.
Ruturaj Gaikwad Marriage: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2023 ஐபிஎல் கோப்பையை வென்ற கையுடன் ருதுராஜ் கெய்க்வாட், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிக்கான இந்திய அணிக்கு காத்திருப்பு வீரர்களில் ஒருவராக அழைக்கப்பட்டார்.
இருப்பினும், அவரது திருமணம் ஜூன் 3ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (பிசிசிஐ) தகவல் தெரிவித்தார். இதனால் அவருக்கு பதிலாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு அழைக்கப்பட்டார். இதற்கிடையில், ருதுராஜ் கெய்க்வாட் தனது நீண்ட நாள் காதலி உத்கர்ஷை மகாராஷ்டிராவின் மகாபலேஷ்வர் நகரில் நேற்று (ஜூன் 3) திருமணம் செய்து கொண்டார்.
மனைவியும் ஒரு கிரிக்கெட்டர்
இதையடுத்து, ருதுராஜ் தனது திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிட்டார். அதில்,"ஆடுகளத்தில் இருந்து திருமண மேடை வரை, எங்கள் பயணம் தொடங்குகிறது!" என அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். ருதுராஜின் மனைவி உத்கர்ஷாவும் ஒரு கிரிக்கெட் வீராங்கனை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2023 கோப்பையை வென்ற பிறகு டிரஸ்ஸிங் ரூமில் தோனி பேசிய வார்த்தைகள்!
திருமணத்தில் சிஎஸ்கே வீரர்கள்
உத்கர்ஷா, உள்நாட்டு அளவில் மகாராஷ்டிர மாநில அணிக்காக விளையாடுகிறார். அவர் புனேவில் வசித்து வருகிறார். 24 வயதான அவர் சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி கொண்டாட்டத்தின்போது, கெய்க்வாட் மற்றும் தோனியுடன் இணைந்து புகைப்படங்களிலும் இடம்பெற்றிருந்தார்.
சிவம் துபே, பிரசாந்த் சோலங்கி ஆகிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் கெய்க்வாட்டின் திருமணத்தில் கலந்து கொண்டனர். அதே சமயம் ஷிகர் தவான், ரஷித் கான், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் உம்ரான் மாலிக் போன்றவர்கள் ருதுராஜ் கெய்க்வாட் பதிவிட்ட புகைப்படங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.
26 வயதான ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2023 சீசனில், அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்தார். அவர் 16 போட்டிகளில் விளையாடி 590 ரன்கள் குவித்தார். குறிப்பாக, குஜராஜ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் டேவான் கான்வே உடன் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் 5ஆவது முறையாக கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்தார் எனலாம்.
அவரது சிறப்பான ஆட்டத்தால், இளம் வீரரான ருதுராஜ் தற்போது இந்திய அணிக்கும் தேர்வானார். ஆனால் அவரது திருமணத்தின் காரணமாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபபோட்டிக்கான தங்கள் தயாரிப்புகளை ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அவரால் இந்திய அணியுடன் இணைந்துகொள்ள முடியவில்லை. இந்த இறுதிப்போட்டி, ஜூன் 7-11 வரை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும்.
மேலும் படிக்க | கோப்பையை கையில் வாங்கியதும் தோனி செய்த காரியம்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ