2018-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், பிபா சிறந்த வீரர் விருதுக்கு, குரோசியா அணியின் கேப்டன் லூகா மோட்ரிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


சர்வதேச கால்பந்து சம்மேளனம் ஆண்டுதோறும் உலகின் சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்து சிறந்த வீரருக்கான விருதை வழங்கி வருகிறது. அதன்படி, 2018-ம் ஆண்டிற்கான விருதை வழங்குவதற்கா ரொனால்டோ, முகமது சலா, லூகா மோட்ரிச் இடையே கடும் போட்டி நிலவியது.


இந்நிலையில், ரொனால்டோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி 33 வயதான லூகா மோட்ரிச் 2018-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கால்பந்து வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகக்கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தங்க கால்பந்து விருதும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.