நாடு திரும்பும் விராட் கோலி, முக்கிய வீரருக்கும் காயம் - இந்திய டெஸ்ட் அணிக்கு சறுக்கல்!
Team India: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
India National Cricket Team: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் டிச. 26ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது போட்டி ஜன.3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பின் ரோஹித் சர்மா இந்திய அணிக்கு இதன்மூலம் திரும்புகிறார்.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஸ்ரீகர் பரத் என அசூர பலம் கொண்ட பேட்டர்கள் இடம்பெற்றுள்ளனர். சுழற்பந்துவீச்சை ஜடேஜாவும், அஸ்வினும் கவனித்துகொள்ள வேகப்பந்துவீச்சை பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார் ஆகியோர் உள்ளனர்.
இந்த டெஸ்ட் தொடருக்கு முன் இந்தியா டி20 மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி உள்ளது. குறிப்பாக டி20 தொடரை இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமன் செய்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம், விராட் கோலிக்கு பின் தென்னாப்பிரிக்க அணியை அவர்களின் மண்ணிலேயே வீழ்த்திய இரண்டாவது கேப்டன் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.
மேலும் படிக்க | 'மெதுவா போடு மச்சி...' இந்த வீரரிடம் தமிழில் பேசிய கேஎல் ராகுல்...!
இந்த சுற்றுப்பயணத்தில் பல வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. ரோஹித், விராட் ஆகியோர் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை, டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங், ஆகியோர் டி20, ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றாலும் டெஸ்டில் இடம்பெறவில்லை. சூர்யகுமார் டி20யில் மட்டுமே பங்கேற்றார். சிராஜ் டி20 மற்றும் டெஸ்ட், குல்தீப் யாதவ் டி20 மற்றும் ஒருநாள், பும்ரா டெஸ்ட் அணிக்கு மட்டும் என வீரர்கள் பார்மட்டுக்கு ஏற்ப விளையாடினர். இதில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் சர்மா ஆகியோர் மட்டும் மூன்று பார்மட்டிலும் விளையாடுகின்றனர்.
அந்த வகையில், ருதுராஜ் கெய்க்வாட் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது அவருக்கு மோதிர விரலில் அடிப்பட்டது. எனவே, அவர் நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் கூட விளையாடவில்லை. அவருக்கு பதில் ராஜத் பட்டீதர் ஓப்பனராக அறிமுகமானார். இருப்பினும், அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக விலகவில்லை. அவருக்கான மாற்று வீரரை நாளை பிசிசிஐ அறிவிக்கலாம் என கூறப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க இந்திய வீரர் விராட் கோலி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்புகிறார். காரணம் தெளிவாக சொல்லப்படாத நிலையில், அவர் டிச.26ஆம் தேதி டெஸ்ட் போட்டியை விளையாட வந்துவிடுவார் என கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ