India vs Australia, Gabba Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் (Border Gavaskar Trophy) தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலும், இரண்டாவது போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. தற்போது தொடரின் மொமண்டம் ஆஸ்திரேலிய அணியுடன் நீடிக்கிறது எனலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் (Brisbane Gabba Cricket Ground) நடைபெற இருக்கிறது. காபா மைதானம் இந்தியாவுக்கு முக்கியமான ஒன்று என்பது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்தே. ஆஸ்திரேலிய அணியின் (Team Australia) கோட்டையாக விளங்கிய காபா மைதானத்தில் கடந்த 2020-21 சுற்றுப்பயணத்தின் கடைசி போட்டி நடைபெற்றது. அந்த போட்டியை வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும் என்ற நிலையில், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது. அதன்மூலம், இரண்டாவது முறையாக தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பார்டர் - கவாஸ்கர் கோப்பையையும் வென்றுள்ளது.


பிளேயிங் லெவனில் வரப்போகும் தலைவலி


இதனால், கடந்த முறை போலவே இங்கு மீண்டும் சிறப்பான வெற்றியை பதிவு செய்ய இந்திய அணி (Team India) முயற்சிக்கும் எனலாம். அதுமட்டுமின்றி கடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் சொதப்பியிருந்த நிலையில், அடுத்த போட்டியில் அனைத்தையும் சீரமிக்கும் முனைப்பில் ரோஹித் சர்மா - கம்பீர் இணை இருக்கும். அதாவது பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மாற்றங்கள் (Team India Playing XI Changes) அவர்களுக்கு நிச்சயம் பெரிய தலைவலியை கொடுக்கலாம்.


மேலும் படிக்க | IND vs AUS: ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா? ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள மாற்றம்!


பேட்டிங்கில் பெரியளவில் சொதப்பியிருந்தாலும் டாப் ஆர்டரில் கைவைக்க இயலாது. அடுத்த போட்டியில் மீண்டும் கேஎல் ராகுல் (KL Rahul) ஓப்பனிங் வருவாரா அல்லது மிடில் ஆர்டருக்கு திரும்புவாரா என்பதே ஒரே கேள்வியாக இருக்கிறது. சுப்மான் கில் 3வது இடத்தில் சிறப்பாக செயல்படுவதால் அவரையும் தொட முடியாது. விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோரும் அடுத்த போட்டியில் முக்கிய பங்களிப்பை அளிக்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றனர். நிதிஷ்குமார் ரெட்டியும் அணியில் நீடிப்பார் என்பது உறுதியாகிறது. பும்ரா அடுத்த 3 போட்டிகளிலும் விளையாடுவார் என்பதும் உறுதியாக தெரிகிறது.


இந்த 2 வீரர்கள் அவுட்...


இந்தச் சூழலில், ரவிசந்திரன் அஸ்வின், முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா ஆகியோரின் இடங்கள் தற்போது ஊசலாட்டத்தில் இருக்கிறது. சிராஜ் அடுத்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு 70% இருக்கிறது எனலாம். ஷமி இல்லாத நிலையில் பும்ராவுக்கு அடுத்து சிராஜே முதன்மையான வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். எனவே ஷமி வராதபட்சத்தில் சிராஜ் மூன்றாவது போட்டியிலும் அணியில் தொடர்வார் என நம்பலாம். அந்த வகையில், அஸ்வினுக்கு பதில் மீண்டும் வாஷிங்டன் சுந்தரும், ஹர்ஷித் ராணாவுக்கு பதில் ஆகாஷ் தீப்பும் (Aakash Deep) அணியில் சேர்க்கப்படலாம்.


அஸ்வின் பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டாலும் வாஷிங்டனுக்கு (Washington Sundar) காபாவில் நல்ல அனுபவம் இருக்கிறது எனலாம். கடந்த முறை காபா போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூருடன் உடன் நீண்ட பார்ட்னர்ஷிப் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக ஸ்கோர் செய்தது என அவருக்கு சிறப்பான ஒரு போட்டியாக அமைந்திருந்தது. ஆகாஷ் தீப் புதிய பந்தில் நல்ல ஸ்வீங் செய்வார் என்பதால் நிச்சயம் அவரையும் அணியில் சேர்க்கலாம். அந்த வகையில், இதுவே அடுத்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்யப்படும் மாற்றமாக இருக்கலாம்.


இந்திய அணி (பிளேயிங் லெவன் கணிப்பு): யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சுப்மான்  கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், ரோஹித் சர்மா (கேப்டன்), நிதிஷ்குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.


மேலும் படிக்க | ஒரே போட்டியில் மாறிய புள்ளிபட்டியல்! இந்தியாவின் WTC Final கனவு அவ்வளவுதான்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ