இந்தியாவில் தேவையில்லாத ஆணி இவர்தான்... உலகக் கோப்பையிலும் தொடரும் வீக்னஸ் - என்ன செய்யலாம்?
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து ஆறு போட்டிகளில் வென்றிருந்தாலும், இந்திய அணியின் சில வீரர்கள் மீது இன்னும் விமர்சனங்கள் எழுகின்றன. அதுகுறித்து இதில் காணலாம்.
India National Cricket Team: 1983, 2011 ஆகிய இரண்டு ஆண்டுகளும் இந்தியாவின் கிரிக்கெட் வரலாற்றில் சிறப்பான ஆண்டுகளில் ஒன்று. அது ஏன் என நான் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அந்த வகையில், 2023ஆம் ஆண்டும் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்க பெரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனலாம்.
இந்தியாவின் வெற்றிக்கு காரணம் என்ன?
ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து என நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) இந்திய அணி வெற்றியை குவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒன்றுதான் இநத் தொடரில் தற்போது வரை தோல்வியே தழுவாத அணியாக உள்ளது. சொந்த மண் என்ற அனுகூலம் இருந்தாலும் இந்திய அணியின் அனைத்து பிரிவுகளிலும் பெரும் பலத்துடன் இருப்பதே அனைத்து வெற்றிகளுக்கும் முக்கிய காரணம்.
சுப்மன் கில் உடல்நிலை குறைப்பாடால் முதலிரண்டு போட்டிகளை தவறிவிட்டார். அவருக்கு பதில் இஷான் கிஷன் (Ishan Kishan) உள்ளே வந்து, ஆஸ்திரேலிய போட்டியில் சொதப்பினாலும் ஆப்கன் போட்டியில் நல்ல தொடக்கத்தை அளித்தார். பின்னர், தற்போது ஹர்திக் பாண்டியாவின் (Hardik Panya) எதிர்பாராத காயம் காரணமாக அணிக்குள் வந்த சூர்யகுமார் யாதவும் இந்தியாவின் பின்வரிசைக்கு பலம் சேர்க்கிறார். மேலும், பாண்டியாவின் பந்துவீச்சுக்கு ஈடுகட்ட ஷர்துலுக்கு பதில் ஷமி கொண்டுவரப்பட்டார். அவர் இரண்டு போட்டிகளிலேயே 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு பெரும் பங்கை ஆற்றினார்.
ஷார்ட் பிட்ச் பந்தும்... ஷ்ரேயாஸ் ஐயரும்...
இப்படியிருக்க இந்திய அணியின் (Team India) மீது சில விமர்சனங்களும் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) மீதுதான். ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டமிழப்பது பெரும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது. சர்வதேச அளவில் இந்தியா போன்ற ஒரு அணிக்கு நான்காவது இடத்தில் விளையாடும் ஒரு வீரர், இயல்பான ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தொடர்ந்து அவுட்டாவது ஏற்றுக்கொள்ள முடியாதது என சமூக வலைதளங்களில் கருத்துகள் வருகின்றன.
மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் உலகத்தர பேட்டர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் 4 இடத்தில் சமீப காலங்களில் அதிக ரன்களை குவித்த வீரராக உள்ளார். மேலும், மிடில் ஆர்டரில் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோர் நிதானமாக விளையாடும்போது துணிச்சலான ஆட்டப்பாணியை கடைபிடிக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு முக்கியமான வீரராகவும் உள்ளார். ஆனால், உலகக் கோப்பையில் இன்னும் இலங்கை, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட லீக் போட்டிகள் மட்டுமின்றி நாக்அவுட் போட்டிகளிலும் உள்ள நிலையில், அவருக்கு பதில் அந்த இடத்தில் இஷான் கிஷனை முயற்சித்து பார்க்க வேண்டும் என குரல்கள் எழுந்துள்ளன.
ஏன் இஷான் கிஷன்?
இஷான் கிஷன் ஆசிய கோப்பை தொடரில் கேஎல் ராகுலுக்கு மாற்றாக மிடில் ஆர்டரில் விளயைாடியிருந்தார். அவர் அந்த ஆர்டரிலும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அவரை வரும் இலங்கை போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதில் கொண்டுவரலாம் என கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. மேலும், இஷான் இடதுகை வீரர் என்பதால் அது இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும், அதேபோல அவரும் ஷ்ரேயாஸ் போல் அட்டாக்கிங் பாணி ஆட்டக்காரர் என்பதால் இஷானுக்கு இலங்கை போட்டியில் வாய்ப்பளிக்க வேண்டும் என கூறப்படுகின்றன.
ஏனென்றால், இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வரும் நிலையில், நாக்-அவுட் சாபத்தில்(?) இருந்து தப்பிக்க இன்னும் பலம்வாய்ந்த அணியாக உருவெடுக்க வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் கடந்த 6 போட்டிகளிலும் 134 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிகபட்சமாக 53 ரன்களை எடுத்தார், அந்த ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். இதில் இந்திய அணி நிர்வாகம் வழக்கம்போல் அவருக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்குமா அல்லது இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | விராட், ரோஹித் சர்மா இல்லை! அதிக முறை டக் அவுட் ஆனா வீரர் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ