Duleep Trophy 2024, Ishan Kishan Injury: இந்திய அணி (Team India) கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி அன்று இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடியது. அதன்பின் நீண்ட இடைவெளியில் இருக்கும் இந்திய அணிக்கு செப். 19ஆம் தேதியில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதற்கு முன் உள்ளூர் தொடரான துலிப் டிராபி நாளை (செப். 5) தொடங்க உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் அனந்தபூரிலும், பெங்களூருவிலும் இந்த தொடர் நடைபெறுகிறது. Team A, B, C, D என மூன்று அணிகள் விளையாட உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோத உள்ளது. மொத்தமுள்ள 3 சுற்றில் 6 போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையை தட்டிச்செல்லும்.


நட்சத்திர வீரர்களின் சங்கமம் 


இந்த தொடரில், சுப்மான் கில், கேஎல் ராகுல், குல்தீப் யாதவ், ஜடேஜா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகேஷ் குமார், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், சிராஜ், சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட், ரஜத் பட்டிதார், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், கேஎஸ் பரத், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், இஷான் கிஷன், உம்ரான் மாலிக் உள்பட பல நட்சத்திர வீரர்கள் இடம்பெறுவதாக பிசிசிஐயால் அறிவிக்கப்பட்டது. ஏ அணிக்கு சுப்மான் கில்லும், பி அணிக்கு அபிமன்யூ ஈஸ்வரனும், சி அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட்டும், டி அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டன்களாக செயல்பட உள்ளனர்.


மேலும் படிக்க | வங்கதேச டெஸ்ட் தொடரில் காபா டெஸ்ட் நாயகனுக்கு இடம் கொடுக்க கம்பீர், ரோகித் முடிவு


துலிப் டிராபியை தவறவிடும் வீரர்கள்


இருப்பினும், சிராஜ், ஜடேஜா, உம்ரான் மாலிக், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் துலிப் டிராபியில் பங்கெடுக்க மாட்டார்கள் என பிசிசிஐ பின்னர் அறிவித்தது. பெரும்பாலும் முதல் சுற்று போட்டிகளில் இவர் பங்கேற்க வாய்ப்பில்லை. அடுத்த கட்ட போட்டிகளில் இவர்கள் விளையாடலாம். ஆனால், இவர்களில் சிலர் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வாகும் போது அவர் இதில் பங்கேற்க மாட்டார்கள் என்பது உறுதியாகும். 


சிராஜ், ஜடேஜா ஆகியோர் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் நிச்சயம் இடம்பெறக்கூடியவர்கள். உம்ரான் மாலிக், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு டெஸ்ட் ஸ்குவாடில் இடம்கிடைப்பது அரிதாகும். சூர்யகுமார் யாதவ் தமிழ்நாட்டில் நடைபெற்ற புச்சிபாபு தொடரில் மும்பை அணிக்காக விளையாடியபோது காயமடைந்ததாக கூறப்படுகிறது. 


விலகும் இஷான் கிஷன்?


இந்நிலையில், டி அணியில் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் இஷான் கிஷனும் காயம் காரணமாக முதல் சுற்று போட்டியில் விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரும் புச்சிபாபு தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக விளையாடினார். துலிப் டிராபியில் இவர் இடம்பெற்றிருந்த டி அணியில்தான் ஷ்ரேயாஸ் ஐயர், தேவ்தத் படிக்கல், கேஎஸ் பரத், ஹர்ஷித் ராணா, துஷார் தேஷ் பாண்டே, அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், அதர்வா டைடே உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளன. நாளை அனந்தபூரில் நடைபெறும் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சி அணியை, ஷ்ரேயாஸ் தலைமையிலான இந்த டி அணி எதிர்கொள்ள இருக்கிறது. 


இஷான் கிஷன் பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மீண்டும் சர்வதேச அரங்கில் விளையாட பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். ரஞ்சி, புச்சிபாபு, துலிப் டிராபி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் கவனம் செலுத்திய போதிலும் தற்போதைய காயம் அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. 


சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு


இடது கை பேட்டரான இஷான் கிஷன் இந்த முதல் சுற்று போட்டியில் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் அவருக்கு ஸ்குவாடில் இடம் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. புச்சிபாபு தொடரில் அதிரடி சதம் அடித்து அனைவரையும் திரும்பி  பார்க்க வைத்தார். ஆனால், நேரம் கைக்கூடி வரும்போது காயத்தால் பொன்னான வாய்ப்பை தவறவிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் கருத்து கூறப்படுகிறது. இஷான் கிஷன் காயத்தால் விலகுவது உறுதியாகும்பட்சத்தில் அவருக்கு பதில் டி அணிக்கு சஞ்சு சாம்சன் மாற்று வீரராக அறிவிக்கப்படலாம். கேஎஸ் பரத் அணியில் இருப்பதால் மற்றொரு விக்கெட் கீப்பருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பதும் சந்தேகம்தான். 


மேலும் படிக்க | உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் துலிப் டிராபி... நான்கில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா? - இதை படிங்க!
 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ