Chennai Super Kings, MS Dhoni: 17ஆவது ஐபிஎல் சீசன் (IPL 2024) தொடங்குவதற்கு இன்னும் சில நாள்களே உள்ளன. தேர்தல் சீசனும் வர உள்ள நிலையில், முதற்கட்ட போட்டிகளின் அட்டவணை மட்டுமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 22ஆம் தேதி ஐபிஎல் தொடங்குகிறது. இதில் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. பல முக்கிய நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி வரும் மார்ச் 7ஆம் தேதி தொடங்க உள்ளது. ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டியும் மார்ச் 10ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் முடிவடைந்த உடன் ஒட்டுமொத்த வீரர்களும் தங்கள் அணியின் பயிற்சி முகாமில் இணைவார்கள் எனலாம். ஏற்கெனவே பல வீரர்கள் அந்தெந்த அணியின் பயிற்சி முகாமில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


ஐபிஎல் மீதான எதிர்பார்ப்பு


இந்த ஐபிஎல் தொடரில் ஏற்கெனவே பல சுவாரஸ்யங்களை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு இடையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. ஐபிஎல் ஏலம் முதல் பல பரபரப்பான காட்சிகள் மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நிலவியது. 


ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டரான கேம்ரூன் கிரீனை பெங்களூரு அணிக்கு டிரேட் செய்த மும்பை அணி, குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மீண்டும் அணிக்குள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியாவை குஜராத்திடம் இருந்து வாங்கியது மட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்டியாவை அறிவித்தது மும்பை. அதாவது, ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு ஹர்திக் பாண்டியாவுக்கு பொறுப்பை ஒப்படைத்தது.


மேலும் படிக்க | ரோகித் சர்மாவை வீழ்த்த பிளான் போட்ட 2 மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!


தோனியின் கடைசி ஐபிஎல்?


இது அணிக்குள்ளும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் புயலையே கிளப்பியது எனலாம். சூர்யகுமார் யாதவ், பும்ரா ஆகியோர் இதுசார்ந்த அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், இளம் வீரர் இஷான் கிஷன் ரோஹித்தை விடுத்து ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாகவும் ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 


அதேபோல், இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் (MS Dhoni) கடைசி ஐபிஎல் தொடர் என்றும் கூறப்படுகிறது. வருடாவருடம் இது கூறப்படுவதுதான் என்றாலும், இந்த முறை இது சாத்தியமாகும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக கூறப்படுகிறது. எனவே, தோனி விளையாடும் போட்டிகளை எதிர்பார்த்து கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். 


இந்நிலையில், தோனி இன்று மாலை தனது பேஸ்புக் பக்கத்தில் போட்டுள்ள பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது. அந்த பதிவில் தோனி,"புதிய சீசனுக்காகவும், புதிய 'பொறுப்பாகவும்' காத்திருக்கிறேன். தொடர்ந்திருங்கள்" என பதிவிட்டுள்ளார். அதாவது, புதிய பொறுப்பு (New Roles) என்பதை மேற்கொள்கட்டி குறிப்பிட்டுள்ள தோனியின் பதிவால் ரசிகர்கள் ஆழ்ந்த சிந்தனைக்கே சென்றுள்ளனர். 


தோனியின் பேஸ்புக் பதிவு: