India National Cricket Team: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் (ICC Champions Trophy 2025) வரும் பிப். 19ஆம் தேதி பாகிஸ்தானின் 3 நகரங்களில் நடைபெற இருக்கிறது. இத்தொடரில் டாப் 8 அணிகள் மோதுகின்றன. இந்திய அணி மட்டும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில், 50 ஓவர்கள் வடிவில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெறும் நிலையில், இந்திய வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 2023 ஐசிசி உலகக் கோப்பையில் இந்திய அணி (Team India) இறுதிப்போட்டி வரை வந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டது. எனவே, வரும் சாம்பியன்ஸ் டிராபியில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற இந்திய அணி தனது பலவீனங்கள் அனைத்தையும் சீர் செய்ய வேண்டும் என முனைப்பில் இருக்கும்.


இந்திய அணியின் பிளான் இதுதான்


எனவே, பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் அனுபவம் மற்றும் சிறப்பாக செயல்படும் இளம் வீரர்களை அணியில் வைத்திருக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. சீனியர் வீரர்கள் சிலர் மோசமான பார்மில் இருப்பதால் அவர்களுக்கு பதில் மாற்று வீரர்களை அணிக்குள் கொண்டு வருவதன் மூலம் பலமான அணியை கட்டமைக்க முயல்வார்கள். அப்படியிருக்க, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து உடனான ஒருநாள் தொடரிலேயே இந்திய அணி எந்தெந்த வீரர்களை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கொண்டு செல்ல நினைக்கிறது என்பது உறுதியாகிவிடும்.


மேலும் படிக்க | பும்ரா காயம்! அவருக்கு பதில் இந்திய அணியில் இணையப்போகும் 3 வீரர்கள்!


சாம்பியன்ஸ் டிராபியில் இவர்கள் உறுதி


யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் அரங்கில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கலாம். நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பிருக்குமா என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், முகமது ஷமி, முகமது சிராஜ் போன்ற வீரர்கள் நிச்சயம் இங்கிலாந்து ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவார்கள். குல்தீப் யாதவ் அணியின் பிரதான சுழற்பந்துவீச்சாளராக இருப்பார். பும்ரா இங்கிலாந்து ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என்றாலும், சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவது அவரது உடற்தகுதியை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.


சாம்பியன்ஸ் டிராபி: 3 சீனியர்களுக்கு வாய்ப்பில்லை


ஆனால், 2023 உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் சாம்பின்ஸ் டிராபி தொடரில் சேர்க்கப்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு என தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேஎல் ராகுலின் (KL Rahul) மோசமான பார்ம் ஒருபுறம் இருக்க, நம்பர் 5இல் ரிஷப் பண்ட் என்ற விக்கெட் கீப்பர் பேட்டர் வந்துவிட்டதால் அணியில் இருப்பதற்கான தேவை குறைந்துவிட்டது. மேலும், ரிஷப் பண்டின் பேக்அப்பாக சஞ்சு சாம்சன் பார்க்கப்படுகிறார்.


நம்பர் 4இல் யார்?


அதேபோல், நம்பர் 4இல் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) சிறப்பாக விளையாடினால் கூட இந்திய அணி அவரை எடுப்பதற்கு தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கூட ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதில் நம்பர் 4இல் விராட் கோலி அல்லது சுப்மான் கில் யாராவது ஒருவர் விளையாடலாம். இல்லையெனில் சஞ்சு சாம்சனே கூட விளையாடும் வாய்ப்புகள் உள்ளது.


ஜடேஜாவுக்கு (Ravindra Jadeja) பதில் அக்சர் பட்டேலுக்கு வாய்ப்பளிக்க நினைப்பார்கள். ஆல்-ரவுண்டர் பேக் அப்பாக வாஷிங்டன் சுந்தரை கொண்டு வருவார்கள், இதனால், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ஜடேஜா ஆகிய மூன்று சீனியர் வீரர்களும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறுவது கேள்விக்குறிதான்.


மேலும் படிக்க | கம்பீர் நீக்கப்பட்டால் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இவர் தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ