Yuzhvendra Chahal On ICC World Cup 2023: அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய சீனியர் ஆடவர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு உலகக் கோப்பைக்கான இந்திய ஆடவர் அணியை கடந்த மாதம் அறிவித்தது. அதில், ஒரே ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளருக்கு மட்டுமே வாய்ப்பும் கிடைத்தது, அந்த இடம் குல்தீப் யாதவிற்கு கிரீன் கார்டும், யுஸ்வேந்திர சஹாலுக்கு (Yuzhvendra Chahal) ரெட் கார்டும் வழங்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலகக் கோப்பை அணியில் இடமில்லை


தற்போது கூட அக்சர் படேலுக்கு (Axar Patel) காயம் ஏற்பட்டதால் அஸ்வினை மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். இந்த உலகக் கோப்பையில் (ICC World Cup 2023) சாஹலின் நம்பிக்கை பொய்த்துப் போனது. குல்தீப் - சஹால் ஆகிய இரு லெக் ஸ்பின்னர்களில், இடதுகை சைனாமேன் என்பதால் சஹால் முன்னிலை பெற்றார். இருப்பினும், சாஹல் தரமான பந்துவீச்சாளர் தான், அவரை விலக்கியது பலரையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது. ஆனால் 15 பேர் கொண்ட இந்திய அணியில் ஒரு மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் மட்டுமே இடம்பிடிக்க இயலும் என்பதும் மறுக்க முடியாதது.


சாஹலை விட குல்தீப் யாதவ் (Kuldeep Yadav) சற்று பேட் செய்வது, சஹாலுக்கு சாதகமாக அமையவில்லை. இருப்பினும், உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்காத விரக்தியை சஹால், இந்தியாவுக்கு சிவப்பு பந்து கிரிக்கெட்டை விளையாட ஒரு உந்துதலாகப் பயன்படுத்துகிறார். அதனால்தான் அவர் கவுண்டி அணியான கென்ட் அணிக்காக சில போட்டிகளில் விளையாட ஒப்பந்தமானார். 


மேலும் படிக்க | 1992 World Cup: 1 பந்தில் 22 ரன்கள்... தென்னாப்பிரிக்காவின் கனவை கலைத்தது மழையா... பேராசையா...?


புறக்கணிப்பு பழகிவிட்டது


சாஹல் 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கோப்பையில் தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை மறந்துவிடாதீர்கள். 2021ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் அவர் முதல் முறையாக இதுபோன்ற புறக்கணிப்பை எதிர்கொண்டார். 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடருக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அஸ்வினுக்கு பிளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டதால் சஹால் அந்த வாய்ப்பை இழந்தார். 


அவர் இங்கிலாந்தில் உள்ள விஸ்டன் இந்தியா ஊடகத்திடம் இந்த புறக்கணிப்பு குறித்துப் பேசினார், அதில் அவர் இதுபோன்ற புறக்கணிப்பு இப்போது பழகிவிட்டதாகக் கூறியுள்ளார். அதில் அவர்,"பதினைந்து வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஏனென்றால் இது உலகக் கோப்பை, அங்கு நீங்கள் 17 அல்லது 18 வீரர்களை எடுக்க முடியாது. நான் கொஞ்சம் மோசமாக உணர்கிறேன். ஆனால் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே எனது குறிக்கோள். நான் பழகிவிட்டேன். அது இப்போது, மூன்று உலகக் கோப்பைகளாகிவிட்டது" என்று சொல்லிவிட்ட சஹால் சிரித்தார்.


சிவப்பு பந்து கிரிக்கெட்டில் கவனம்


இந்தியாவுக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற தனது கனவை நனவாக்க விரும்பும் சாஹல், நடந்து வரும் கவுண்டி சீசனில் தனது முழு ஆற்றலையும் செலுத்தி வருகிறார் என தெரிகிறது. "அதனால்தான் நான் கென்ட் அணியுடன் விளையாட வந்தேன். ஏனென்றால் எப்படியாவது எங்காவது கிரிக்கெட் விளையாட வேண்டும். சிவப்பு பந்தில் எனக்கு இங்கு வாய்ப்பு கிடைக்கிறது, மேலும் இந்தியாவுக்காக சிவப்பு பந்தில் விளையாட விரும்புகிறேன். எனவே இது எனக்கு ஒரு நல்ல அனுபவமாக இருந்தது" என்று சாஹல் தெரிவித்துள்ளார்.


கென்ட் அணியில் தனது ஆட்டத்தில் சிவப்பு பந்து கிரிக்கெட் பற்றி நிறைய கற்றுக்கொண்டதாக சஹால் கூறினார். நெட்ஸில் பந்துவீசுவதை விட மேட்சில் வீசுவதே எப்போதுமே சிறந்தது என்றார். "நான் பயிற்சியாளர்களிடமும் பேசினேன், நான் எங்காவது விளையாடியதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், ஏனென்றால் நீங்கள் வலைகளில் எவ்வளவு வேண்டுமானாலும் பயிற்சி செய்யலாம், ஆனால் போட்டி தான் முதன்மையானது. நான் இங்கே ஒரு நல்ல மட்டத்தில் விளையாடுகிறேன்" என்றார்.


மேலும் படிக்க | 2007 உலக கோப்பை மறக்க முடியாத தருணங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ