ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது ஆப்கானிஸ்தான்... இந்திய அணிக்கு பெரிய ஆபத்து - காரணம் என்ன?
AUS vs AFG Match: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றியை பெற்று, அணியின் அரையிறுதி வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது.
AUS vs AFG Match Highlights: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டிவிட்டது எனலாம். குரூப் சுற்று போட்டிகளிலேயே பல அணிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகளால் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையவே முடியவில்லை. அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு நுழைந்தது. ஆனால், இதனை பலரும் கேள்விக்குட்படுத்தினர். இதுபோன்ற அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு வந்தாலும் பலன் இருக்காது, பெரிய அணிகள் எளிதாக சூப்பர் 8 சுற்றில் வெற்றி பெற்றுவிடும் என கூறி வந்தனர்.
ஆனால் இந்த அத்தனை பேச்சுக்களையும் தாண்டி இன்று வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ஆப்கானிஸ்தான் இன்று பதிவு செய்துள்ளது. சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்றைய போட்டியில் அந்த அணியின் சிறப்பான பந்துவீச்சால் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் இந்த வெற்றியால் சூப்பர் 8 சுற்றில் இப்போதுதான் சூடுபிடித்துள்ளது எனலாம். இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்ற முதல் குரூப்பில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு போட்டிகளும் இப்போது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேலும் படிக்க | இந்த ஓவர் கான்பிடன்ஸ் வச்சி சொதப்பும் ரோகித்..! தட்டி தூக்கிய ஷகிப் அல்ஹசன்
இந்திய நேரப்படி நாளை (ஜூன் 24) இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு அதிகமாகும். இருப்பினும் இந்திய அணிக்கு நெட் ரன்ரேட் அதிகம் இருப்பதால் சற்று ஆறுதல் எனலாம். ஆஸ்திரேலிய அணி அரையிறுதி செல்ல வேண்டும் என்றால் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
தற்போது இந்தியாவின் நெட் ரன்ரேட் +2.425, ஆஸ்திரேலியாவின் நெட் ரன்ரேட் +0.223 ஆகும். எனவே, நாளைய போட்டியில் இந்திய அணி போராடி தோற்றாலும் பிரச்னை இல்லை எனலாம், இருப்பினும் ஆஸ்திரேலியாவிடம் ஜாக்கிரதையாக விளையாடாவிட்டால் பெரும் ஆபத்தை சந்திக்க நேரிடும். ஒருவேளை நாளைய போட்டியில் ஆஸ்திரேலியா தோற்று, நாளை மறுநாள் காலை 6 மணிக்கு நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் ஆப்கன் வெற்றி பெறும்பட்சத்தில் ஆஸ்திரேலியா தொடரை விட்டு வெளியேறும்.
மறுபுறம் இரண்டாவது குரூப்பிலும் எந்த அணிகள் அரையிறுதிக்கு செல்கின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை. இன்று இரவு நடைபெறும் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 10 ரன்கள் வித்தியாசத்திலோ அல்லது ஒரு ஓவர் மிச்சம் வைத்தோ வெற்றி பெற்றால் நேரடியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிடும் எனலாம். அந்த வகையில், நாளை காலை 6 மணிக்கு நடைபெறும் தென்னாப்பிரிக்கா - மேற்கு இந்திய தீவுகள் போட்டியில் வெற்றி வெறும் அணிகள் அரையிறுதிக்குச் செல்லும்.
மேலும் படிக்க | விராட் கோலியை முறைத்த பௌலர்... களத்தில் பதிலடி கொடுத்த ரோஹித் - ஆக்ரோஷ வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ