இந்தியாவை வீழ்த்த இது ஒன்றுதான் வழி... எதிரணிகளுக்கு கில்கிறிஸ்ட் கொடுத்த ஐடியா - என்ன தெரியுமா?
Indian Cricket Team: நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியை வெல்வதற்கான ஆஸ்திரேலிய மூத்த வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
India National Cricket Team: நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்திய அணி 8 லீக் போட்டிகளில் விளையாடி, அனைத்து போட்டிகளிலும் வென்று முதலிடத்தை பிடித்துள்ளது. அரையிறுதிக்கும் முதல் அணியாக முன்னேறிய நிலையில், நவ.15ஆம் தேதி மும்பை வான்கடேவில் நடைபெறும் போட்டியில் விளையாடும். நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை குறிவைத்துள்ளன. இந்த மூன்று அணிகளில் ஒன்று, இந்தியா அரையிறுதியில் மோதும்.
இந்தியாவுடன் (Team India) மோதப்போவது யார் என்பது நவ.11ஆம் தேதி பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியில்தான் உறுதியாகும். அது ஒருபுறம் இருக்க, இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணி நவ.12ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோத உள்ளது. இந்திய அணி இதுவரை தோல்வியடையாமல் வலுவான நிலையில் உள்ளதால் கடைசி லீக் போட்டியையும் வென்றும் கூடுதல் நம்பிக்கையுடன் அரையிறுதியை எதிர்கொள்ளும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி விளையாடிய 8 லீக் போட்டிகளில் 5 போட்டிகளை சேஸிங்கிலும், மூன்று போட்டிகளை இரண்டாவது பந்துவீசியும் வென்றுள்ளது. இதில், இந்திய அணியினர் விளையாடிய 8 அணிகளையும் ஆல்அவுட் செய்துள்ளனர், ஆனால் யாரிடமும் ஆல்அவுட்டாகவில்லை. அந்தளவிற்கு இந்தியா வலுவான அணியாக காணப்படுகிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா என அனைத்து பலமான அணிகளையும் இந்தியா எளிதாக வென்றது. எனவே கோப்பையை இந்தியா வெல்லும் என்ற நம்பிக்கையும் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
இருப்பினும், இந்திய அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக நாக்-அவுட் என்பது பிரச்னையாக இருந்துள்ளது. 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் ஐசிசி கோப்பைகளை வெல்லாத இந்திய அணி பல முறை நாக்-அவுட் போட்டிகளில் ஏமாற்றமடைந்திருக்கிறது. அந்த வகையில், நடப்பு உலகக் கோப்பையில் நாக்-அவுட்டிலும் லீக் போட்டியில் காட்டிய அதே ஆட்டத்தை காட்ட வேண்டும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில், இந்திய அணியை வீழ்த்துவதற்கான வழியை ஆஸ்திரேலியா முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்டர் ஆடம் கில்கிறிஸ்ட் (Adam Gilchrist) தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதாவது,"இந்தியாவுக்கு எதிராக முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், இந்தியா அவர்களின் வெற்றிகளை எப்படி பெற்றது என்பதை நான் பார்க்கிறேன். ஆனால், இதன்மூலம் சேஸிங்கில் அவர்களுக்கு பலவீனம் இருப்பதாக நான் கூறவில்லை. அவர்களின் ரன் சேஸிற்கு விராட் கோலி ஒரு ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறார்.
ஆனால், இந்திய பந்துவீச்சு தாக்குதல் இரவு லைட் வெளிச்சத்தின்கீழ் ஏற்படுத்திய சேதம், அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம். அந்த சூழலில், சிராஜ், ஷமி மற்றும் பும்ரா ஆகியோரை ஏறத்தாழ யாராலும் விளையாட முடியவில்லை. எனவேதான், பகல் நேரத்தில் அவர்களுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அவர்கள் சுழற்பந்துவீச்சுடன், குறிப்பாக அங்குள்ள சூழ்நிலைகளில்படி அவர்கள் சற்று அதிக பலத்துடன் இருப்பதை இந்தியா அடையாளம் கண்டுகொண்டது. ஆனால் அவர்கள் வெளிநாடுகளில் போட்டியிட விரும்பினால், அவர்கள் வேகப்பந்துவீச்சையும் வலுவாக உருவாக்க வேண்டும். இங்குள்ள MRF பேஸ் அகாடமி டெனிஸ் லீலி மற்றும் இப்போது க்ளென் மெக்ராத் ஆகியோர் கண்டிப்பாக இதில் உதவி செய்துள்ளனர் எனலாம்.
வேகப்பந்துவீச்சாளர்களுடன் திறமையான இரண்டு வகையான சுழற்பந்துவீச்சும் அழகாக இணைந்துள்ளதால், இந்தியா நன்கு சமநிலையான பந்துவீச்சு வரிசையைக் கொண்டுள்ளது. ஜடேஜாவின் புள்ளி விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன. குல்தீப் யாதவ் ஒரு வித்தியாசமானவர், இந்த வரிசை எந்த பேட்டிங் வரிசையையும் நிலைகுலைய செய்யும். பின்புலத்தில் ரவி அஸ்வின் அமர்ந்திருக்கிறார். அவர்கள் எப்பொழுதும் சக்திவாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளனர். ஆனால் பந்துவீச்சின் வீரியம் தான் அவர்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில் அவர்கள் ஒரு அச்சுறுத்தலாகும்" என்றார்.
மேலும் படிக்க | தோல்வியே இல்லாமல் உலகக் கோப்பையை தூக்கிய 2 அணிகள்... இந்தியாவும் லிஸ்டில் சேருமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ