இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு... இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் - பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்?
![இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு... இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் - பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்? இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆப்பு... இந்த வீரரை வெளியேற்ற வேண்டும் - பிளேயிங் லெவன் வருகிறது மாற்றம்?](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2024/12/21/460469-playingxi.png?itok=6iZYCyB_)
Border Gavaskar Trophy Series: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் ஏற்படலாம். அதுகுறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Border Gavaskar Trophy Series, Boxing Day Test: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு (India vs Australia) இடையில் நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி வரும் டிச.26ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பிரம்மாண்டமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (MCG - Melbourne Cricket Ground) நடைபெற இருக்கிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த போட்டியை 'பாக்ஸிங் டே' டெஸ்ட் போட்டி என்று அழைப்பார்கள். அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் இந்தாண்டு பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய அணி மோத இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.
இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் (Boxing Day Test 2024) போட்டியை காண்பதற்கு 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை தருவார்கள் என்பதால் பெரும் திருவிழாவை போல் தோற்றமளிக்கும். கடந்த இரண்டு முறையும் மெல்போர்னில் இந்திய அணி வெற்றியை ருசித்திருப்பதால் தொடர்ந்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட துடிக்கும். இருப்பினும் சொந்த மண்ணில் மீண்டும் தோல்வியை சந்திக்கக் கூடாது என்பதிலும் ஆஸ்திரேலியா கண்ணும் கருத்துமாக இருக்கும். தற்போது தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே இருக்கின்றன.
மெல்போர்ன் பாக்ஸிங் டே டெஸ்ட் - வானிலை நிலவரம்
அந்த வகையில், மெல்போர்னில் நடைபெறும் இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இரு அணிகளுக்கும் அதிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. கடந்த பிரிஸ்பேன் டெஸ்ட் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டதால், ஆட்டம் டிராவானது. எனவே கிரிக்கெட் ரசிகர்கள் மெல்போர்னில் வானிலை நிலவரம் என்ன, இங்கும் மழை வருமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். பாக்ஸிங் டேவில் கடுமையாக வெயில் அடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது முதல் நாள் 39 டிகிரி வரை வெயில் அடிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதேபோல், டெஸ்ட் போட்டியின் 5 நாள்கலும் நல்ல வெயில் அடிக்கும் என்றே கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அஷ்வின் ஓய்வு பெற்றதால் பிசிசிஐ எவ்வளவு ஓய்வூதியம் கொடுக்கும் தெரியுமா?
கடந்த டெஸ்ட் போட்டியில் மழை பெய்தது இந்திய அணிக்கு சாதகமாக இருந்ததோ, இந்த முறை அதிக வெயில் இந்திய அணிக்கு பாதகமாகவே அமையும் எனலாம். இந்திய வேகப்பந்துவீச்சாளர் நீண்ட ஸ்பெல்களை போடுவதற்கு கடினமான சூழலாக இருக்கும். ஆஸ்திரேலிய அணியின் (Team Australia) வேகப்பந்துவீச்சாளர்கள் இந்த சூழலுக்கு அதிகம் பழக்கப்பட்டவர்கள். பும்ரா, சிராஜ், ஆகாஷ் தீப் போன்றோர் அத்தகைய நீண்ட ஸ்பெல்களை வீசுதற்கு பயிற்சி எடுத்திருப்பார்கள் என்றாலும் இந்திய அணி இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களுடன் செல்லலாம்.
வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு?
தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினும் ஓய்வை அறிவித்துவிட்டதால் ரவீந்திர ஜடேஜா உடன் வாஷிங்டன் சுந்தர்தான் களமிறங்குவார் என்பது உறுதியாகிவிட்டது. அஸ்வின் (Ravichandran Ashwin) மெல்போர்ன் சூழலுக்கு பழக்கப்பட்டவர். இங்கு எப்படி விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். தற்போது அவர் இல்லாதது இந்திய அணிக்கு (Team India) பெரிய பின்னடைவு என்று சொல்லியே ஆக வேண்டும். வாஷிங்டன் சுந்தர் அஸ்வினுக்கு பின் தானே ஆஸ்தான சுழற்பந்துவீச்சாளர் என்பதை நிரூபிக்க இந்த போட்டி மிக முக்கியமானதாக அமையும்.
அது சரி, வாஷிங்டன் சுந்தரை (Washington Sundar) உள்ளே கொண்டுவர வேண்டும் என்றால் யாரை வெளியே வைக்க வேண்டும் என நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. இந்திய அணிக்கு இரண்டே ஆப்ஷன்கள்தான் இருக்கிறது. ஒன்று சிராஜை அமரவைக்கலாம், அல்லது நிதிஷ்குமார் ரெட்டியை அமரவைக்கலாம். நிதிஷ்குமார் பந்துவீச்சில் பெரியளவுக்கு உதவிக்கரமாக இல்லை என்றாலும் பேட்டிங்கில் அதகளம் செய்கிறார். எனவே, அவருக்கு பதில் சிராஜை வெளியே வைத்துவிடுவது நல்லது. வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கிலும் நல்ல பங்களிப்பை அளிப்பார் எனில் நிதிஷ்குமாரை வெளியேவைத்து சிராஜ் அல்லது ஹர்ஷித் ராணா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கலாம். எனவே, மூன்று பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்களும் கிடைப்பார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ