பிசிசிஐ-யிடம் வசமாக மாட்டிக்கொண்ட ரோஹித், கம்பீர்! 6 மணி நேரம் தொடர்ந்த விசாரணை!
ஜெய் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி தலைமையில் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ரோஹித் சர்மா, கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்த அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியாவை வாஷ்-அவுட் செய்தது. இதனால் கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழக்காமல் இருந்த இந்திய அணியின் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரின் தோல்வியால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர்கள் கம்பிருக்கு அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தோல்விக்கான காரணம், அணியின் தேர்வு, பயிற்சி யுத்திகள் பற்றி தீவிரமாக விசாரிக்க பிசிசிக்கு ஒரு விசாரணை கமிட்டியை அமைத்துள்ளது. இதில் கேப்டன் ரோஹித் சர்மா, தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோரிடம் ஆறு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் ரோஜர் பின்னி இந்த விசாரணை கமிட்டிக்கு தலைமை தாங்கி உள்ளனர். ஆஸ்திரேலியா தொடருக்குப் பிறகு, அதன் முடிவை பொறுத்து பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று இந்த விசாரணையில் முடிவில் பேசப்பட்டுள்ளது. கௌதம் கம்பீருக்கு முன்பு ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அவரது தலைமையில் இரண்டு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்திய அணி சென்றது. மேலும் 2023 ஒரு நாள் உலக கோப்பையில் பைனலுக்கு சென்றது, 2024 டி20 உலக கோப்பை வென்றது. இப்படி தொடர்ந்து சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த இந்திய அணி கவுதம் கம்பீரின் தலைமையில் இலங்கை அணியுடன் ஒரு நாள் தொடர் தோல்வி மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடர் தோல்வியை சந்தித்தது கம்பீரின் பயிற்சி மீது கேள்விகளை எழுப்பி வருகிறது. மேலும் அவரை மாற்ற வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பிசிசிஐ கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது?
பிசிசிஐ இந்த விசாரணையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவிற்கு ஏன் ஓய்வு வழங்கப்பட்டது? டெஸ்ட் தொடரை இழந்து இருந்தாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வெற்றி தேவை என்ற நிலையில் அவருக்கு ஏன் ஓய்வு கொடுத்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும் மும்பை மற்றும் புனேவில் எதற்காக இப்படி ஒரு பிட்ச் தயார் செய்யப்பட்டது என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தொடரில் நித்திஷ் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா போன்ற அனுபவம் இல்லாத வீரர்களின் தேர்வு குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரோகித் சர்மா, கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் சொன்ன பதில்கள் பிசிசிஐ தலைமைக்கு ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்த மாதம் விளையாட உள்ளது. இந்த தொடரின் முடிவை பொறுத்து இந்திய அணியில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு நாள் மற்றும் டி20 அணிக்கு ஒரு பயிற்சியாளரும், டெஸ்ட் அணிக்கு ஒரு பயிற்சியாளரையும் நியமிக்கலாம் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ