IND vs AUS: இந்த போட்டியும் மூணு நாள் தானா... ஆடுகளம் நிலவரம் என்ன?
IND vs AUS 4th Test: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை எந்த எல்லைக்கும் சென்று வென்றாக வேண்டும் என்று ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் இணை குறியோடு களம் காண உள்ள நிலையில், வெற்றிக்கு ஆடுகளமும் முக்கிய பங்கு வகிக்கிறது.
IND vs AUS 4th Test Match Pitch Condition: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் கடந்த பிப். மாதம் தொடங்கியது. மூன்று டெஸ்ட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், இந்தியா முதலிரண்டு போட்டிகளை வென்றிருந்தது. ஆனால், மூன்றாவது டெஸ்ட் தொடரில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
மூன்று நாள்கள் டெஸ்ட்
தற்போது, 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரில் முன்னிலை பெற்றிருந்தாலும், நான்காவது போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த போட்டியில் இந்தியா நிச்சயம் வெற்றியை பதிவு செய்ய வேண்டும். கடந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா முன்னேறிவிட்டது நினைவுக்கூரத்தக்கது.
எனவே, இந்த போட்டியை எந்த எல்லைக்கும் சென்று வென்றாக வேண்டும் என்று ரோஹித் சர்மா - ராகுல் டிராவிட் இணை குறியோடு களம் காண உள்ளது. இதில், இந்திய ஆடுகளங்களும் பெரும் பங்கை செலுத்துகின்றன.
கடந்த மூன்று போட்டிகளும் மூன்று நாள்களிலேயே நிறைவடைந்த நிலையில், இந்த போட்டியாவது ஐந்தாவது நாளுக்கு செல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இரண்டு அணியின் பேட்டர்களும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாவதுதான் வாடிக்கையாக உள்ளது. எனவே, அகமதாபாத் ஆடுகளம் எப்படிப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கருப்பா... சிவப்பா...
மைதானத்தின் நடுவே, கருப்பு மண், செம்மண் என இரண்டு ஆடுகளங்கள் இருப்பதாக மைதான நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இதில், எந்த ஆடுகளத்தை ஆட்டத்திற்கு வழங்குவது என முடிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆடுகள பராமரிப்பாளர்கள் தெரிவிக்கையில்,"இந்திய அணி நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை. எங்கள் உள்ளூர் பராமரிப்பாளர்கள் இந்த சீசனில் எப்பொழுதும் செய்ததைப் போலவே ஒரு சாதாரண ஆடுகளத்தையே தயார் செய்து வருகின்றனர்" என்றனர்.
இதுவரை அகமதாபாத் மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. 2021ஆம் ஆண்டில், இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் இரண்டே நாள்களில் முடிவடைந்தது. இந்தியாவின் சுழல் ஜாலத்தில் இங்கிலாந்து சுருண்டு விழுந்தது எனலாம். எனவே, இந்த முறையும் போட்டி அப்படிதான் விரைவாக முடிந்துவிடுமா என்ற கேள்வி எழுந்தது.
ஆனால், இங்கிலாந்துடன் இந்தியா செம்மண் ஆடுகளத்தில்தான் விளையாடியது. எனவே, இம்முறை கருப்பு மண் ஆடுகளத்தில்தான் ஆஸ்திரேலியா உடன் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த போட்டி நடந்த இந்தூர் மைதானம், மோசமான மைதானதம் என ஐசிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது இங்கு நினைவுக்கூரத்தக்கது.
ரோஹித் சூசகம்
இந்திய அணி பிளேயிங் லெவனிலும் சமரசம் செய்ய வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து சொதப்பி வந்த கே.எல். ராகுல் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட நிலையில், நான்காவது போட்டியிலும் இதுபோன்ற மாற்றங்கள் இருக்கும் கணிக்கப்படுகிறது.
மேலும் படிக்க | IND vs AUS: 4வது டெஸ்ட் ட்ராவில் முடிந்தால் இந்தியா WTC பைனலுக்கு தகுதி பெறுமா?
விபத்துக்குள்ளான ரிஷப் பண்டுக்கு பதிலாக அணிக்குள் வந்த கே.எஸ். பரத் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. கே.எஸ். பரத் கடந்த மூன்று போட்டியிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஒரு இன்னிங்ஸை கூட விளையாடவில்லை எனலாம். அதாவது மூன்று போட்டிகளில் விளையாடி, இரண்டு இன்னிங்ஸில் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்துள்ளார்.
அவருக்கு பதில், இடதுகை விக்கெட் கீப்பிங் - பேட்டரான இஷான் கிஷனுக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தன்னை நிரூபித்து வரும் நிலையில், நாளைய போட்டியின் மூலம் இவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரோஹித் சர்மா இன்று கூறுகையில்,"கே.எஸ். பரத் அறிமுகமாகியதில் இருந்து சூழல் கடினமாகதாகவே உள்ளது. அவர் தன்னை நிரூபிக்க இன்னும் காலங்கள் இருக்கிறது. கே.எஸ்.பாரத்தை இந்த வகையான ஆடுகளங்களை மட்டும்வைத்து மதிப்பிடுவது சற்று நியாயமற்றது. அவருக்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். கவலைப்பட வேண்டாம், தன்னை நிரூபிக்க அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும் என்று நான் சொன்னேன். இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைத்தாலும், இரண்டு ஆட்டங்களுக்கு பிறகு அவரை கைவிட மாட்டோம்.
ரிஷப் பண்டை நாங்கள் மிஸ் செய்கிறோம். அவர் பேட் மூலம் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். பந்த் இல்லாததால் எங்களுக்கு இஷான் கிடைத்துள்ளார்" என்றார்.
மேலும் படிக்க | India vs Australia: 4வது டெஸ்டில் அதிரடி மாற்றங்கள்! முக்கிய வீரருக்கு ஓய்வு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ