ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலக கோப்பை கால்பந்து லீக் போட்டி  ‘இ’ பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள  பிரேசில் அணி தனது கடைசி லீக்கில் செர்பியாவுடன் மோதியது. இதில் 0-2 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்திய பிரேசில் அணி வெற்றி பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பரபரப்பாக தொடங்கிய ஆட்டத்தில், பிரேசில் வீரர் பவுலின்ஹொ தனது முதல் கோலை பதிவு செய்தார். இதனை சமன் செய்ய செர்பிய அணி வீரர்கள் எடுத்த முயற்சி பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 0-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை பெற்றிருந்தது.


அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதியில் பிரேசில் அணியின் சார்பில் சில்வா 1 கோல் அடித்தார். இதன் மூலம் பிரேசில் அணி 2 கோல்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்தது. கடைசி வரை செர்பியா அணியினரால் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது.