Breaking News: T20 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் இருந்து UAEக்கு மாறியது - BCCI
16 நாடுகளின் கலந்துக் கொள்ளும் போட்டி டி 20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரசு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது
புதுடெல்லி: 16 நாடுகளின் கலந்துக் கொள்ளும் போட்டி டி 20 உலகக் கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதாக, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்தார்.
கோவிட் -19 தொற்றுநோயைத் தொடர்ந்து போட்டியை நடத்த பிசிசிஐயின் தயார்நிலை தொடர்பான தகவல்களை அறிந்த பிறகுதான் போட்டி தொடர்பான விவரங்கள் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இன்று இந்திய கிரிக்கெட் கவுன்சில் தனது முடிவை அறிவித்தது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் பரவலால் இந்தியாவில் போட்டிகளை நடத்துவது தொடர்பாக ஐ.சி.சி விதித்திருந்த காலக்க்டு இன்றுடன் முடிவடைந்தது. இது தொடர்பாக பேசிய பிசிசிஐ துணைத் தலைவர் இவ்வாறு கூறினார்:
டி 20 உலகக் கோப்பையைப் பொருத்தவரை, எங்கள் முடிவைப் பற்றி ஐ.சி.சி.க்கு தெரிவிக்க வேண்டிய காலக்கெடு இன்று. எனவே, இன்று பி.சி.சி.ஐ அலுவலக பொறுப்பாளர்களின் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவை எடுத்தோம் என்று பி.சி.சி.ஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
2-3 மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கப் போகிறது என்பது யாருக்கும் நிச்சயமாகத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு, டி-20 உலகக் கோப்பை போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றலாம் என்று பி.சி.சி.ஐ முடிவு எடுத்துள்ளது.
இந்தியாவுக்குப் பிறகு போட்டிகளை நடத்த சிறந்த இடம் ஐக்கிய அரசு அமீரகம் தான். நாங்கள் அதை இந்தியாவில் நடத்த விரும்பினோம், எங்கள் முதல் முன்னுரிமை இந்தியா தான் என்று ராஜூவ் சுக்லா தெரிவித்தார்.
ஏற்கனவே திட்டமிட்ட தேதிகளிலேயே போட்டிகள் நடைபெறும். தகுதிப் போட்டிகள் ஓமனில் நடைபெறலாம் மற்றும் மீதமுள்ள போட்டிகள் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா என மூன்று இடங்களில் நடைபெறும்.
Also Read | Viral Video: WTC பைனல்ஸில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR