உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் பி.வி.சிந்து!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவிட்சர்லாந்து மான்சென்ஸ்டீன் நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.


உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்களில் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.



இப்போட்டியில் துவக்கம் முதல் சிந்துவின் ஆதிக்கமே அதிகம் இருந்தது. இதன் முதல் செட்டை 21-7 என கைப்பற்றினார் சிந்து. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் அதிக்கத்தை தொடர்ந்த சிந்து 21-7 என மிகச்சுலபமாக வெற்றியை தனதாக்கினார்.


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்த சிந்து, இந்தியாவிற்கு உலக சாம்பியன்ஷிப்பில் ஐந்து முறை பதக்கம் வென்று கொடுத்தவர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார்.


முன்னதாக, கடந்த 2013 மற்றும் 2014ல் வெண்கலப்பதக்கம் வென்ற சிந்து, கடந்த 2017 மற்றும் 2018ல் வெள்ளிப்பதக்கம் வென்றார். இந்நிலையில் தற்போது தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.