ரிஷப் பந்த் இனி கிரிக்கெட் விளையாட முடியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் நேற்று (டிச. 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லி நோக்கி தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரின் கார் ஹரிதுவார் ரூர்க்கி நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலை டிவைடரில் பலமாக மோதியுள்ளது. இதில் பந்த் பலத்த காயத்துடன் உயிர் தப்பினார். ரிஷப் பந்த் தனது முகம் மற்றும் தோலின் மற்ற பகுதிகளில் ஏற்பட்ட சிராய்ப்புகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார். அவர் நிச்சயமாக பார்டர் கவாஸ்கர் டிராபியில் விளையாடப் போவதில்லை, மேலும் பந்த் இல்லாததால் ஆஸி-க்கு எதிராக இந்தியா கடுமையான சிக்கலில் இருக்கும். ரிஷப் பந்த் இல்லாமல் இந்தியா WTC 2023 இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாது. இருப்பினும், ரிஷப் பந்த் ஐபிஎல் 2023ல் விளையாடுவாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மேலும் படிக்க | விரைவில் இந்திய அணிக்கு டாட்டா காட்டும் டிராவிட்... அடுத்தது யார்?
தற்போது வெளியான தகவல்களின்படி ரிஷப் பந்த் ஐபிஎல் 2023-ல் விளையாடப் போவதில்லை, மேலும் டெல்லி கேபிடல்ஸ் இந்த ஆண்டு வேறு கேப்டனைக் கண்டுபிடிக்க வேண்டும். ரிஷப் பந்த் மே 2023 க்குள் உடல் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாடுவதற்கு அவர் NCA க்கு அறிக்கை செய்து கட்டாய சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
காயங்களில் இருந்து முழுமையாக மீண்ட பிறகும், ரிஷப் பந்த் இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு NCA இல் சுமார் ஒரு மாதம் செலவிட வேண்டும். அவரது வலது காலில் தசைநார் கிழிவு உட்பட பல காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2023 முதல் இந்திய கிரிக்கெட் அணிக்கான தேர்வில் அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ