காதலர்களாக வலம் வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா கடந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் டெஸ்ட், ஒருநாள் உள்ளிட்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இந்தப்போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவியுடன் சென்றுள்ளார்.


தென் ஆப்ரிக்காவின் தலைநகர் கேப் டவுனில் உள்ள கடற்கரையில் தனது காதல் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கோலி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 


அந்த புகைப் படத்துடன் அவர் குறிப்பிட்டுள்ள வாசகம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர் கூறியுள்ளது, "கேப் டவுன் அழகான இடம், அனுஷ்காவுடன் இருக்கும்போது இன்னும் அழகாக தெரிகிறது என காதல் கவிதையாய் விராட் ட்விட்டர் பதிவில் பொழிந்துள்ளார்.