INDvsSA: இவர்களுக்கு தெளிவு தேவை.. தோல்விக்கு பிறகு கடுப்பாக பேசிய ரோகித்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. உலககோப்பைக்கு செல்லும் இந்திய அணிக்கு இந்த தோல்வி எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது. கேப்டன் ரோகித் சர்மாவும் தோல்விக்குப் பிறகுபேசும்போது, தன்னுடைய பேட்டியில் இதனை குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளையும், அறவுரைகளும் வீரர்களுக்கு வழங்கினார். அதில் அவரின் கோபமும் தெளிவாக தெரிந்தது.
தென்னாப்பிரிக்கா வாண வேடிக்கை
தென்னாப்பிரிக்கா அணி, கடைசி 20 ஓவர் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை தயவு தாட்சண்யம் இல்லாமல் நொறுக்கி தள்ளியது. அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திய அந்த அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது. டிகாக் 68 ரன்கள் விளாச, ரிலோ ரோஸ்ஸோ 48 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் எடுத்தார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை. இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தினேஷ் கார்த்திக்கை தவிர யாரும் நிலைத்து நின்று விளையாடாததால் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
மேலும் படிக்க | உலக கோப்பையில் இருந்து விலகிய பும்ரா! சிஎஸ்கே வீரருக்கு அடித்த லக்!
கடுப்பாக பேசிய கேப்டன் ரோகித் சர்மா
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு பேசிய கேப்டன் ரோகித் சர்மா, " ஒரு அணியாக மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டோம். தொடர்ந்து முன்னேற்றம் செய்ய வேண்டியது அவசியமாக இருக்கிறது. பந்துவீச்சில் இன்னும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. பவர்பிளே மிடில் ஓவர் மற்றும் டெத் ஓவர்களில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். வீரர்களுக்கும் தெளிவு தேவை. என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறார்களோ அதனை செய்ய அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும்" என்றார்.
மேலும் படிக்க | T20WC: வேற வழியே இல்லாமல் ஸ்டார் பவுலரை அழைக்கும் இந்திய அணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ