இந்திய கேப்டன் விராத் கோலியின் அறக்கட்டளையும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் தொண்டு நிறுவனமும் இணைந்து தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் விதமாக நட்சத்திர கால்பந்து போட்டி நடத்தியது. இந்த போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியும், பாலிவுட் நட்சத்திரங்கள்(ஆல் ஸ்டார் எஃப்சி) அணியும் மோதின. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள்(ஆல் ஹார்ட் எஃப்சி) அணியில் 5-வது நிமிடத்தில் தல டோனி அடித்த கோல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் 39-வது நிமிடத்தில் 2-வது கோலும் அடித்தார்.


வீடியோ:-


 



 


இப்போட்டியில் ஆல் ஹார்ட் எஃப்சி அணி 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருதை தல டோனி பெற்றார்.