சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி தோற்றது. ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லண்டனில் நடைபெற்ற இந்தியா, ஆஸ்திரேலியா ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே இறுதிச்சுற்றுக்கு முன்னேறிவிட்டபோதிலும் அவர்கள் வழக்கம்போல சிறப்பாக ஆடினார்கள். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்கிற கோல் கணக்கில் வெற்றி பெற்றது .


இந்த ஆட்டத்தில் இந்திய தோற்றபோதிலும் ஏழு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பெற்று இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம்-பிரிட்டன் இடையிலான ஆட்டம் 3-3 என்கிற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இது இந்திய அணிக்குச் சாதகமாக அமைந்துவிட்டது. 


இதனால் சாம்பியன்ஸ் டிராபி வராலாற்றில் இந்திய அணி முதல்தடவையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. சாம்பியன்ஸ் டிராபியைப் பொறுத்த வரையில் இந்திய ஹாக்கி அணி இதற்கு முன்பாக 1982ஆம் ஆண்டு மட்டும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.


இன்று நடைபெறுகிற இறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதவுள்ளன.