ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை மிகச் சிறப்பாக வழி நடத்தி சென்ற மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்க்கு சொந்த ஊரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டி வரை முன்னேறியது. மகளிர் இந்திய அணியை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பரிசுகளும் குவிந்து வருகின்றன.


இந்திய பிரதமர் மோடி, மகளிர் இந்திய அணியை நேரில் அழைத்து அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது தாங்கள் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக அளித்தனர். 


இந்நிலையில் சொந்த ஊர் திரும்பிய மிதாலி ராஜூக்கு ஐதராபாத் விமான நிலையத்தில் உற்சாக அளிக்கப்பட்டது. பிறகு தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மிதாலி ராஜ்க்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகையும், அடுக்குமாடி குடியிருப்பில் 600 சதுரஅடியில் வீடும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.