சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே நடைபெற்ற IPL லீக் 15-வது போட்டியில் மும்பை அபார வெற்றி பெற்றது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

IPL 2019 தொடரின் 15-வது லீக் ஆட்டம் இன்று மும்பை வாங்கேட் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் மகேந்திர சிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.


இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. மும்பை அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய குவிண்டன் டீ காக் 4(7) ரன்களில் வெளியேற, இவரைத்தொடர்ந்து ரோகித் ஷர்மா 13(18) ரன்களில் வெளியேறினார். மும்பை அணி தரப்பில் சூர்யகுமார் யாதவ் 59(43) மற்றும் குர்ணல் பாண்டையா 42(32) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். 


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 171 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது.


துவக்க வீரர்களா களமிறங்கிய வாட்சன் 5(6) மற்றும் அம்பத்தி ராயுடு 0(1) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்களுக்கு அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். கேதர் ஜாதவ் நிதானமாக விளையாடி 58(54) ரன்கள் குவித்தார்.


இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. பின்னர் 37 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மும்பை அணி தரப்பில் லஷ்சித் மலிங்கா, ஹார்திக் பாண்டையா தலா 3 விக்கெட் குவித்தனர்.


இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளுடன் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை அணி,. 4 போட்டிகளில் மூன்று வெற்றி குவித்த சென்னை அணி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.