07:51 PM 17-04-2019


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!



IPL 2019 தொடரின் 33-வது ஆட்டம் இன்று ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது.


IPL 2019 தொடரின் 33-வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.


இத்தொடரின் 7 போட்டிகளில் வெற்றிப்பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் வகித்து வரும் சென்னை அணிக்கு இன்றைய போட்டியின் தோல்வி பெரிதாக பாதிப்பு ஏற்படுத்த போவதில்லை என்றாலும், இதுவரை 4 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள ஐதராபாத் அணிக்கு இன்று மீண்டும் தோல்வி கிடைத்தால் பலத்த அடியாய் அமையும். கடந்த போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் யூசப் பதான் மற்றும் மனீஷ் பாண்டேவினை விட்டு களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி, இன்றை போட்டியில் மீண்டும் இவர்களின் உதவியை நாடுவதாக தெரிகிறது.


இதுவரை இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய போட்டிகளில் சென்னை 8 போட்டிகளிலும் ஐதராபாத் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக ஐதராபாத் நகரில் நடந்த 4 போட்டிகளில் நான்கிலும் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.


பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்களை(16) இழந்த அணியாக சென்னை அணி கருதப்படுகிறது. ஐதராபாத் அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.


ஐதராபாத் அணியின் நட்சத்திர ஆட்டகாரரான புவனேஷ்வர் குமார் பந்தில் இதுவரை 87(49) ரன்கள் குவித்துள்ள மகேந்திர சிங் டோனி இதுவரை அவரது பந்தில் அவுட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, மேலும் ஒரு போட்டியில் சென்னை வெற்றி பெற்றுவிட்டால், அரை இறுதி போட்டிக்கு சென்னை முன்னெறிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.