டெஸ்ட் போட்டியின் 5 நாள்களுமே பேட் செய்த 3-வது இந்திய கிர்கெட் வீரர் என்ற சாதனையை படைத்தார் சட்டீஸ்வர் புஜாரா.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் வியாழன் அன்று காலை துவங்கியது. மழை பெய்ததால், சற்று ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகே டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. எனவே இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.


முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனையடுத்து 2-ஆம் நாள் ஆட்டத்தினை வெள்ளி அன்று காலை இந்தியா துவங்கியது. பின்னர் முதல்நாள் ஆட்டத்தைப் போலவை இரண்டாம் நாள் ஆட்டத்திலும் மழை குறுக்கீட்டதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.


பின்னர் மீண்டும் பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 172 ரன்களுக்கு சுருண்டது. அதன் பின்னர் களமிரங்கிய இலங்கை அணி, ஆரம்பத்தில் சருக்கிய போதிலும் பின்னர் சற்றே சுதாரித்துக்கொண்டு, நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். மூண்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி, 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.


நான்காம் நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த இலங்கை 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் களம்கண்ட இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. 


போட்டியின் 5-ம் நாளான இன்றும் புஜாரா பேட் செய்தார். இதையடுத்து, ரவி சாஸ்திரி மற்றும் எம்.எல். ஜெய்சிம்ஹா ஆகிய இருவருக்குப் பின் டெஸ்ட் போட்டி ஒன்றில் 5 நாள்களுமே பேட் செய்த இந்தியர் என்ற சாதனையை புஜாரா படைத்தார். சர்வதேச அளவில் இந்தச் சாதனையைப் படைக்கும் 9-வது நபர் புஜாரா ஆவார்.