பிசிசிஐ-யின் பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி தலைமையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று மும்பையில் நடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் என்.சீனிவாசன் கலந்துக் கொண்டார்.


இந்த கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதாவின் சிபாரிசுகளை எப்படி அமல்படுத்த வேண்டும் என ஆலோசனை செய்யப்பட்டது. இறுதியாக, லோதா கமிட்டி அளித்த சிபாரிசுகளை அமல்படுத்த, ஒரு கமிட்டியை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமிதாப் சவுத்ரி கூறுகையில்,  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி லோதா கமிட்டி சிபாரிசுகளை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தும் நோக்கில் 5 அல்லது 6 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்படும். இந்த கமிட்டி தனது அறிக்கையை இரண்டு வாரத்தில் அளிக்கும். பின்னர் அதனை செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கும் என கூறினார்.