ஐபிஎல் 2021 ஏலத்திற்கு முன், பல அணிகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்
ஐபிஎல் 2020 இல், மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டியில் டெல்லி அணியை தோற்கடித்து 5 வது முறையாக பட்டத்தை வென்றது.
ஐபிஎல் 2021 ஏலம்: ஐபிஎல் ரசிகர்கள் அடுத்த ஆண்டு IPL தொடர் நடைபெறுவதற்கு முன்பாகவே சில அணியில் வீரர்களின் மாற்றங்களைக் காணலாம். ஐபிஎல் 2021 தொடரில் பங்கேற்கும் அணியில் விளையாடக்கூடிய வீரர்களை எடுக்க ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் ஏலம் நடைபெறும் எனத்தெரிகிறது. இத்தகைய சூழ்நிலையில், சென்னை (Chennai super kings), பெங்களூர் (Royal Challengers Bangalore) மற்றும் மும்பை (Mumbai Indians) அணிகள் தங்கள் சில வீரர்களை அணியில் இருந்து நீக்க உள்ளது. இந்த போட்டியின் 14 வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்படலாம். இருப்பினும் டிசம்பரில் IPL 2021 ஏலத்தை நடத்துமா அல்லது அணியின் வீரர்களின் நிலை 2022 வரை அப்படியே இருக்குமா என்பதை பி.சி.சி.ஐ தீர்மானித்த பிறகு தான் இறுதிக்கட்ட முடிவு தெரியும்.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் ஒரு ராஜாவாக வலம் வருகிறது:
ஐபிஎல் 2020 இல், மும்பை இந்தியன்ஸ் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணியை தோற்கடித்து 5 வது முறையாக IPL Champions பட்டத்தை வென்றது. ரோஹித் ஷர்மாவின் அணி, பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகியவற்றில் காட்டிய அற்புதமான பர்மான்ஸ், கோப்பையை வெல்ல சாதகமாக இருந்தது. மறுபுறம், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஆர்.சி.பி.க்கு இது ஒரு கடினமான நேரம். விராட்டின் அணி பிளேஆஃப்களை அடைந்தாலும், இந்த ஆண்டில் கூட அவர்களால் ஐபிஎல் பட்டத்தை வெல்ல முடியவில்லை. புள்ளி அட்டவணையில் சென்னை 7 வது இடத்தைப் பிடித்தது மற்றும் முதல் முறையாக பிளேஆஃப்களை அடைய முடியவில்லை.
ALSO READ | IPL 2020: மும்பை இண்டியன்ஸ் அணியின் வெற்றி ரகசியத்தை அம்பலப்படுத்திய Rahul Dravid
புதிய அணியை சேர்க்கலாம் (New team in IPL 2021)
ஜீ நியூஸ் டிஜிட்டல் தளம் வெளியிட்ட செய்திகளின்படி, அடுத்த ஆண்டு ஐ.பி.எல்லில் ஒரு புதிய அணியை விளையாடக்கூடும் என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், வீரர்கள் வாங்க ஏலம் கண்டிப்பாக நடைபெறும். மறுபுறம், அணியில் மாற்றங்களைச் செய்ய உரிமையாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அடுத்த 2021 ஆம் ஆண்டில், சென்னை, பெங்களூர் மற்றும் மும்பை உரிமையாளர்கள் சில வீரர்களை விடுவிக்கலாம்.
இந்த அணிகளில் இருந்து வீரர்கள் வெளியேற முடியும்:
சென்னை சூப்பர் கிங்ஸ்
கேதர் ஜாதவின் ஆட்டம் சில காலமாக சிறப்பாக இல்லை. அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் தோல்வியுற்றார். அத்தகைய சூழ்நிலையில், அவர் 2021 ஆம் ஆண்டில் மற்றொரு அணியில் காணப்படலாம். அவரைத் தவிர, டுவைன் பிராவோவும் காயம் காரணமாக அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் இருந்து வெளியேறலாம். ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இனி மஞ்சள் ஜெர்சி அணிவார்களா எனப்து கேள்விக்குறிதான். ஏனெனில் உரிமையாளர் தங்கள் ஒப்பந்தத்தை புதுபிப்பது குறித்துபரிசீலிக்கவில்லை.
ஆர்.சி.பி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
ஐபிஎல் 2020 இல் ஆர்.சி.பியின் செயல்திறன் நன்றாக இருந்திருக்கலாம், ஆனால் அவர்களால் கோப்பையை வெல்ல முடிவடையவில்லை. இந்த அணியில் பந்துவீச்சு குறித்த பிரச்சினை மீண்டும் எழுந்துள்ளது. எனவே அந்த அணி 2021 இல் டேல் ஸ்டெய்ன், மொயின் அலி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரை விடுவிக்கலாம்.
ALSO READ | IPL 2020 முத்தான 5வது கோப்பையை கைப்பற்றி மும்பை இண்டியன்ஸ் அபாரம் in pics
மும்பை இந்தியன்ஸ்:
இந்த அணி ஐபிஎல் பட்டத்தை 5 முறை வென்றுள்ளது மற்றும் நடப்பு சாம்பியனும் கூட, இந்த அணி வீரர்களின் கலவையை மாற்ற விரும்புகிறதா? என்பது தெரியவில்லை. ஆனால் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2020 இல் ஒரு போட்டியில் கூட விளையாடாததால் ஷெர்பன் ரதர்ஃபோர்ட் மற்றும் மிட்செல் மெக்லானேகன் ஆகியோரை விடுவிக்கலாம்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR