PICS: உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணிக்கு புதிய சீருடை!!
2019 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் புதிய சீருடையுடன் களம் இறங்கும் பாகிஸ்தான் அணி.
புது தில்லி / இஸ்லாமாபாத்: 2019 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உளனர். குறிப்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் உலகம் முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது.
இதற்கிடையில் பாக்கிஸ்தான் தனது அணிக்கான உத்தியோகபூர்வ சீருடையை வெளியிட்டுள்ளது. அதுக்குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டர் பக்கத்தில் உலக கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி அணிந்துக்கொள்ள உள்ள புதிய சீருடையை வெளியிட்டுள்ளது.
2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வரும் மே 30 ஆம் தேதி துவங்கி ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்க்கிறது. அதில் பாகிஸ்தானும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவு அணியை எதிர்க்கொள்கிறது. அந்த போட்டி மே 31 ஆம் தேதி நாட்டிங்காமில் நடைபெறும்.