உலக கோப்பை முதல் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி!
உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!
உலக கோப்பை 2019 கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. லண்டன் கென்னிங் டன் மைதானத்தில் நடைப்பெற்ற இப்போட்டில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது.
இதனையடுத்து இங்கிலாந்து தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய ஜானி பாரிஸ்டோவ் 0(1) ரன்னில் வெளியேறிய போதிலும் ஜானி ராய் அபாரமாக விளையாடி 54(53) ரன்கள் குவித்தார். இவரைத்தொடர்ந்து வந்த ஜோ ரூட் 51(59), மோர்கன் 57(60), பென் ஸ்டோக்ஸ் 89(79) என அரைசதங்கள் குவிய நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் இழந்து 311 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் நிகிடி 3 விக்கெட், இம்ரான் தாகிர் மற்றும் ரபாடா தலா 2 விக்கெட்டுகள் குவித்தனர்.
இதனையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரர் குவிண்டன் டீ காக் 68(74) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ராஸ் வான் டெர் டூசன் சற்று நிதானமாக விளையாடி 50(61) ரன்கள் குவித்தார். எனினும் ஆட்டத்தின் 39.5-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து தென்னாப்பிரிக்கா 207 மட்டுமே குவித்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் 3 விக்கட்டுகள் வீழ்த்தினார். பென் ஸ்டோக்ஸ் மற்றும் ப்ளங்கெட் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பேட்டிங்கில் 89(79) ரன்கள் மற்றும் 2 விக்கெட் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவிய பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.