பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019 உலகக்கோப்பை தொடரில் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள 22 -ஆவது லீக் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இன்னும் சற்று நேரத்தில் இப்போட்டி தொடங்கவுள்ளது.


இரு அணி வீரர்கள் விவரம்: 


இந்தியா: ரோஹித் ஷர்மா, ராகுல், கோலி (கேப்டன்), விஜய் சங்கர், தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், பும்ரா, 


பாகிஸ்தான்:  இமாம் உல் ஹக், பகர் ஜாமன், பாபர் அசாம், ஹபீஸ், சர்ப்ராஸ் (கேப்டன்), சோயிப் மாலிக், இமாத் வசிம், ஷாதப் கான், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஆமிர்.