இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இருவரும் கடந்த 11-ம் தேதி இத்தாலியில் கடந்த 11-ம் தேதி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, இவர்கள் இருவரும்  மகிழ்ச்சியாக சுற்றி திரிந்து வந்தனர். பின்னர் விராட் கிரிக்கெட்டிலும் அனுஷ்கா திரைப்படங்களிலும் பிஸியாகி வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இவர்கள், அவ்வபோது தங்களது சமூக வலைதள பக்கங்களில் தங்களது நெகிழ்ச்சி வீடியோவை வெளியிடுவது வழக்கம். முன்னதாக, விராட் கோலி #FitnessChallenge-வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி ஆகியோருக்கும் பரிந்துரைத்தார். இவருடைய சவாலை ஏற்று, பிரதமர் மோடியும் தன்னுடைய #FitnessChallenge-வீடியோவை வெளியிட்டார். 


இந்நிலையில், விராத் கோலி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.,,,!


அதில், அனுஷ்கா சர்மா, காரில் சென்றபோது மற்றொரு காரில் சென்ற ஒருவர் குப்பையை குப்பை தொட்டியில் வீசாமல் சாலையில் வீசுகிறார். இதைக் கண்ட அனுஷ்கா சர்மா, அந்த காரை அருகில் அழைத்து குப்பையை சாலையில் போட்டவரிடம், சாலையில் வீசாதீர்கள், குப்பை தொட்டியில் போடுங்கள் என கண்டிப்புடன் கூறினார். தற்போது இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.