கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டு தடை இன்றுடன் நிறைவடைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் ஆண்டுதோறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு முறை ஐ.பி.எல் சாம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று ஐ.பி.எல். தொடரில் தனது ஆதிகத்தை செலுத்தியது. 


கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சூதாட்டம் நடந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. 


இந்நிலையில், இன்றுடன் இரு அணிகளுக்கும் விதிக்க பட்ட தடை நிறைவடைகிறது. ஏற்கனவே, தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என்று சென்னை அணியின் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். இதனால், விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அழைப்பு விடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளது.