சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் சூப்பர் கிங்ஸ் அகாடமி என்கிற சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கிரிக்கெட் பயிற்சி மையங்களை நிறுவவுள்ளது. இந்த சூப்பர் கிங்ஸ் அகாடமி சென்னை மற்றும் சேலம் ஆகிய இரண்டு மையங்களுடன் தற்போது தொடங்கப்பட்டு, காலப்போக்கில் தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விரிவடையும் என்று கூறியுள்ளது.  சென்னையில் சூப்பர் கிங்ஸ் அகாடமி தொரைப்பாக்கத்திலும், சேலத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி சேலம் கிரிக்கெட் அறக்கட்டளையிலும் அமைக்கப்பட உள்ளது. அகாடமிகள் வரும் ஏப்ரல் 2022 முதல் தொடங்கி ஆண்டு முழுவதும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அகாடமியில் சேருவதற்கான பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. ஆரம்பநிலை அல்லது முன் பயிற்சி பெற்ற குழந்தைகளின் பெற்றோர்கள் www.superkingsacademy.com இல் பதிவு செய்யலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சாஹர்க்கு 14 கோடி, தோனிக்கு 12 கோடி - ஐபிஎல் சுவாரசியங்கள்!


"நாங்கள் ஐந்து தசாப்தங்களாக கிரிக்கெட்டில் ஈடுபட்டுள்ளோம், இது விளையாட்டிற்கு திரும்பக் கொடுப்பதற்கான சிறந்த வழியாகும் என்று நம்புகிறோம். இது எங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களை வளர்ப்பதற்கும் இது சரியான வாய்ப்பாக இருக்கும்.  அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் மற்றும் சிறந்த வசதிகளுடன், சூப்பர் கிங்ஸ் அகாடமி உயர்தர பயிற்சியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், சிறுவர் மற்றும் சிறுமிகளை வழிநடத்துவதில் முழுமையான அணுகுமுறையையும் எடுக்கும்.  சென்னை, தோரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி மைதானத்தில் அனைத்து வித வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.   டர்ஃப் பிட்ச்களுடன் கூடிய அதிநவீன வசதிகளுடன் இந்த மைதானம் உருவாக்கப்பட்டுள்ளது.  சேலத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமி சர்வதேச தரத்தில் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.  அகாடமியில் அனுபவம் வாய்ந்த, BCCI சான்றளிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் இருப்பார்கள்" என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் கூறியுள்ளார்.



சூப்பர் கிங்ஸ் அகாடமி குறித்து பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி, "இது ஒரு அற்புதமான முயற்சி என்று நான் நினைக்கிறேன், இது பல இளைஞர்களுக்கு சில சிறந்த வசதிகள், சிறந்த பயிற்சிகள் ஆகியவற்றைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது என தெரிவித்தார்.  மேலும், பந்துவீச்சு பயிற்சியாளர் எல் பாலாஜி, “இது சிஎஸ்கேயின் சிறந்த முயற்சி. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வளரும் கிரிக்கெட் வீரர்கள் நிச்சயம் பயனடைவார்கள். சேலத்தில் உள்ள அகாடமி அருகிலுள்ள பிற மாவட்டங்களுக்கும் உதவப் போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.



மேலும் படிக்க | சென்னை அணி இதுவரை வாங்கியுள்ள வீரர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR