ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு தொடரை முன்னிட்டு தற்போது மினி ஏலம் நடத்தப்படும்.  வரும் டிசம்பர் 16ஆம்தேதி, பெங்களூரு அல்லது இஸ்தான்புல் நகரில் இந்த மினி ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், டிசம்பர் 23ஆம் தேதி கேரளாவின் கோச்சி நகரில் மினி ஏலம் நடத்தப்டபும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து, 10 அணிகளும் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களின் யாரையெல்லாம் தக்கவைக்கப்போகிறார்கள், வெளியேற்றப்போகிறார்ககள் என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்துள்ளது. 



பொல்லார்ட்டுக்கு டாட்டா


இதை முன்னிட்டு பல்வேறு அணிகளும் தங்களில் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளன. குறிப்பாக, ஐபிஎல் தொடரின் மிகவும் வெற்றிகரமான அணிகளான சென்னை, மும்பையின் பட்டியல் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | கழட்டிவிடும் டெல்லி... மீண்டும் சிஎஸ்கேவுக்கு வரும் Lord - தோனி போடும் புதுகணக்கு!


இதில், மும்பை அணியில் நீண்ட காலமாக விளையாடி வரும், மேற்கு இந்திய தீவுகள் வீரர் கைரன் பொல்லார்ட் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ரோஹித் தலைமையிலான மும்பை அணியில் இருந்து பொல்லார்ட் உடன் மற்றொரு மேற்கு இந்திய தீவுகள் வீரர் ஃபேபியன் ஆலன், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டைமல் மில்ஸ் ஆகியோரை மும்பை அணி விடுவிக்க உள்ளது. 


சென்னை அணியை பொறுத்தவரை, ஜடேஜா விஷயத்தில் இழுபறி நீடித்துவந்த நிலையில், கேப்டன் தோனியின் குறுக்கீட்டால் அவர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மறுபுறம் வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, மிட்செல் சாட்னர் ஆகியோரை சென்னை விடுவிக்க திட்டமிட்டுள்ளது. 


குஜராத் டூ கொல்கத்தா 


ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்றுள்ள இவ்விரு அணிகளும், கடந்த தொடரில், கடைசி இரண்டு இடங்களைதான் பிடித்தது. 


சென்னை அணியை பொறுத்தவரை தோனிக்கு 2023 தொடர்தான், கடைசி தொடராக இருக்கும். மேலும், இந்த தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளதால், கோப்பையை வென்றே ஆக வேண்டிய முனைப்பில் இருக்கும். மும்பையும் ஆறாவது முறையாக கோப்பை வெல்ல வேண்டும் என்ற திட்டமுடன் களமிறங்கும். 



வரும் சீசனில், இங்கிலாந்தின் ஜோஃப்ரா ஆர்சர் மும்பை அணியுடன் இணைய உள்ள நிலையில், ஆஸ்திரேலிய இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஜேசன் பெஹ்ரன்டோர்ஃபை பெங்களூருவிடம் இருந்து மும்பை வாங்கியுள்ளது. இதனால், பும்ரா-ஆர்சர்-ஜேசன் என மிரட்டலான வேகப்பந்துவீச்சு அணிவகுப்புடன் மும்பை களமிறங்கும்.  



இதேபோன்று, குஜராத் டைட்டன்ஸில் இடம்பெற்றிருந்த நியூசிலாந்து வீரர் லாக்கி ஃபெர்குசன், ஆஃப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் ஆகியோரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 


சென்னை அணி 9 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு நான்கு வீரர்களை விடுவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மும்பை அணி, 10 வீரர்களை தக்கவைத்து, 5 வீரர்களை விடுவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் 


தக்கவைக்கும் வீரர்கள்: மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, ரிதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தீபக் சாஹர்


விடுவிக்கும் வீரர்கள்: கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, நாராயண் ஜெகதீஷன் மற்றும் மிட்செல் சான்ட்னர்


மும்பை இந்தியன்ஸ்


தக்கவைக்கும் வீரர்கள்: ரோஹித் சர்மா, டிவால்ட் ப்ரூவிஸ், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், திலக் வர்மா


விடுவிக்கும் வீரர்கள்: ஃபேபியன் ஆலன், கைரன் பொல்லார்ட், டைமல் மில்ஸ், மயங்க் மார்கண்டே மற்றும் ஹிருத்திக் ஷோகின். 


மேலும் படிக்க  | இந்த 5 வீரர்களுக்காக அடித்துக்கொள்ளும் MI மற்றும் CSK! யார் அவர்கள்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ