புதுடெல்லி: IPL 2020 தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. ஆனால் இதுவரை 3 முறை IPL சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா (Suresh Raina) மற்றும் மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) ஆகியோருக்கு பதிலாக அணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது பற்றிய செய்தி வெளியிடப்படவில்லை. இதற்கிடையில், CSK, ரெய்னாவுக்கு பதிலாக, தற்போது, ICC T 20 இன்டர்நேஷனல் சர்வதேச பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்தின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் டேவிட் மலானை (Dawid Malan) களமிறக்க யோசிக்கிறது என்று செய்தி வந்துள்ளது. சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களால் IPL 2020 ஐ விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக மலான் ஆடக்கூடும்


இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப் படவில்லை. ஆனால் ஊடக அறிக்கையின்படி, IPL உரிமையாளரான சென்னை சூப்பர் கிங்ஸ் இங்கிலாந்தின் பேட்ஸ்மேன் டேவிட் மலானை தனது அணியில் சேர்க்க முயற்சித்துக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த விஷயத்தைப் பற்றி அணியில் விவாதிக்கப் பட்டு வருவதாக CSK வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், இது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மலானும் ரெய்னாவைப் போன்ற இடது கை ஆட்டக்காரர் ஆவார்.


ALSO READ: IPL 2020: ‘IPL CUP என்னவோ CSK-வுக்கு தான்’ அடித்துக் கூறுகிறார் Shane Watson!!


இதனுடன், அவர் தற்போது T 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்தின் மிகச்சிறந்த வீரராக உள்ளார். அத்தகைய சூழ்நிலையில், டேவிட் மலான் CSK அணியில் சேர்ந்தால், அது மிகவும் நன்றாக இருக்கும். அதே நேரத்தில், CSK குழு நிர்வாகம் சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்று தேவைப்படுமா இல்லையா என்பதை குறித்து இறுதி முடிவு செய்யும். மறுபுறம், டேவிட் மலானிடமிருந்தும் இதைப் பற்றி எந்த கருத்தும் வெளியிடப் படவில்லை. சமீபத்தில், பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான T-20 தொடரில் மலான் அதிரடியாக ஆடி ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


சுரேஷ் ரெய்னா IPL 2020 இல் திரும்புவதற்கான அறிகுறிகளைக் கொடுத்தார்


குடும்ப காரணங்களால் ஐக்கிய அரபு எமிரேட்சிலிருந்து (UAE) திரும்பிய சுரேஷ் ரெய்னா, IPL போட்டிகளில் மீண்டும் CSK அணியுடன் தான் சேரக்கூடும் என்று சுட்டிக்காட்டியிருந்தார். ரெய்னாவைப் பொறுத்தவரை, அவர் வீட்டில் தனிமையில் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும், எல்லாம் சரியாக நடந்தால், அவர் மீண்டும் UAE-க்குச் சென்று IPL-ல் விளையாடக்கூடும் என்றும் கூறினார். அதன்பிறகு, சோஷியல் மீடியாவில் தனது பயிற்சி மற்றும் ஒர்க்அவுட் வீடியோக்கள் மூலம், IPL 2020 க்கு திரும்புவதற்கான மனதை உருவாக்கி வருவதாக ரெய்னா தெளிவுபடுத்தியுள்ளார்.


ALSO READ: IPL 2020: கொரோனாவை தோற்கடித்து மைதானத்திற்கு திரும்பினார் CSK இன் தீபக் சாஹர்