எளிதான வெற்றியை பதிவுசெய்து மீண்டும் முதலிடம் பிடித்தது CSK!
IPL 2019 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
IPL 2019 தொடரின் 23-வது லீக் ஆட்டம் இன்று சேன்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா க்நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. கொல்கத்தா அணி தரப்பில் துவக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் லெயன் 0(5), சுனில் நரேன் 6(5) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினர். ஆன்றே ரசல் மட்டும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50(44) ரன்கள் குவித்தார்.
சென்னை அணி தரப்பில் தீபக் சஹர் 3 விக்கெட் குவித்தார். ஹர்பஜன் சிங் 2 விக்கெட் குவித்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷேன் வாட்சன் 17(9) குவித்து வெளியேறினார். இவரை தொடர்ந்து களமிறங்கிய ரெய்னா 14(13), அம்பத்தி ராயுடு 21(31) ரன்கள் எடுத்து வெளியேறினர். மறுமுனையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் டூப்ளசிஸ் 43*(45) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆட்டத்தின் 17.2-வது பந்தில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 111 ரன்கள் குவித்த சென்னை அணி இப்போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் புள்ளி பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளது.