சென்னை சூப்பர் கிங்ஸ் Vs பஞ்சாப் கிங்ஸ்: நடப்பாண்டு ஐபிஎல் 2021 (Indian Premier League) சீசனில் இன்றைய 53 வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடக்கிறது. இந்தப் போட்டி துபாயில் உள்ள துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். மதியம் 3.30 போட்டி ஆரம்பமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்ச்சியாக கடைசி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது, எனவே பிளேஆஃபிற்கு முன்பு, எம்எஸ் தோனியின் அணி வெற்றி பாதைக்கு திரும்ப விரும்புகிறது. மறுபுறம், ப்ரீத்தி ஜிந்தாவின் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இன்றைய போட்டி மிகவும் முக்கியமானது. செய் அல்லது செத்துமடி என்ற நிலையில் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய போட்டியில் தோற்றால், லீக் சுற்றுடன் இந்த அணி வெளியேற வேண்டியிருக்கும்.


இன்றைய போட்டியில், சென்னை முழு பலத்துடன் களம் இறங்கும். கடந்த போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு பதிலாக ராபின் உத்தப்பாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இன்று இந்த இரண்டு நட்சத்திர வீரர்களில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பார்க்க வேண்டும்.


மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் அணி இன்று முழு உத்வேகத்துடன் முக்கிய வீரர்கள் மற்றும் அனுபமிக்க வீரர்களுடன் களம் இறங்கும். நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்கரம் மற்றும் மொயிஸ் ஹென்ரிக்ஸ் கண்டிப்பாக பஞ்சாப் அணிக்காக விளையாடுவதைக் காணலாம். அதே நேரத்தில் கேப்டன் கேஎல் ராகுல், சர்பராஸ் கானுக்கு பதிலாக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.


இரு அணிகளிலும் இந்த 11 பேர் விளையாட வாய்ப்புள்ளது:
பஞ்சாப் கிங்ஸ்: கேஎல் ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், ஷாருக்கான், தீபக் ஹூடா, மொயிஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.


சென்னை சூப்பர் கிங்ஸ்: ரிதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெஸிஸ், ராபின் உத்தப்பா/சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR