CSK vs RCB: ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் இன்று சென்னை அணி மற்றும் பெங்களூரு அணிகள் மோதி விளையாடி வருகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3ல் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை (Chennai Super Kings) அணியின் கேப்டன் தோனி (Dhoni) முதலில் பேட்டிங் செய்தனர். அதன்படி பெங்களூர் அணி (Royal Challengers Bangalore) பவுலிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களில் ருதுராஜ் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கி ரய்னா 4 பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றபோது 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்தார். ஆனால் அடுத்த பந்திலே சிக்ஸர் அடிக்க முயன்று டு பிளெசிஸ் 50 ரன்னில் அவுட் ஆனார். 


ALSO READ | IPL 2021: கடைசி பந்து வரை டென்ஷன், MI வீழ்த்தி RCB முதல் வெற்றி!


அடுத்தது அம்பதி ராயுடு களம் இறங்கினார். இவர் 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் விளையாட வந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஹாட்ரி சிக்ஸர் விளாசினார். இதனால், ரவீந்திர ஜடேஜா 25 பந்தில் அரைசதம் விளாசினார். இப்போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர் , 1 பவுண்டரி, 2 ரன்கள் என மொத்தம் 37 ரன்கள் ரவீந்திர ஜடேஜா அடித்தார்.


இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கவுள்ளது. பெங்களூர் அணியில் ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டை பறித்தார்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR