CSK vs RCB: பெங்களூர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் மாஸ் வெற்றி பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை (Chennai Super Kings) அணியின் கேப்டன் தோனி (Dhoni) முதலில் பேட்டிங் செய்தனர். அதன்படி பெங்களூர் அணி (Royal Challengers Bangalore) பவுலிங் செய்தது. சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் , டு பிளெசிஸ் இருவரும் இறங்கினர். இவர்கள் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களில் ருதுராஜ் 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 33 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து இறங்கி ரய்னா 4 பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றபோது 24 ரன்னில் விக்கெட்டை இழந்தார். சிறப்பாக விளையாடி வந்த டு பிளெசிஸ் அரைசதம் அடித்தார். ஆனால் அடுத்த பந்திலே சிக்ஸர் அடிக்க முயன்று டு பிளெசிஸ் 50 ரன்னில் அவுட் ஆனார். 


ALSO READ | IPL 2021: கடைசி பந்து வரை டென்ஷன், MI வீழ்த்தி RCB முதல் வெற்றி!


அடுத்தது அம்பதி ராயுடு களம் இறங்கினார். இவர் 14 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் விளையாட வந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஹாட்ரி சிக்ஸர் விளாசினார். இதனால், ரவீந்திர ஜடேஜா 25 பந்தில் அரைசதம் விளாசினார். இப்போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர் , 1 பவுண்டரி, 2 ரன்கள் என மொத்தம் 37 ரன்கள் ரவீந்திர ஜடேஜா அடித்தார்.


இறுதியாக சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். 192 ரன்கள் இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. பெங்களூரு அணியில் மேக்ஸ்வெல்லை தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்ததுள்ளது. சென்னை அணியில் ஜாடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


முழு அணிகள்


சென்னை சூப்பர் கிங்ஸ்: மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கே.எம். ஆசிப், தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ஃபஃப் டு பிளெசிஸ், இம்ரான் தாஹிர், என் ஜெகதீசன், கர்ன் சர்மா, லுங்கி என்ஜிடி, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜாதேஜா, ரவீந்திர ஜாதேஜா , சாம் குர்ரன், ஆர் சாய் கிஷோர், மொயீன் அலி, கே கவுதம், சேதேஸ்வர் புஜ்ரா, ஹரிஷங்கர் ரெட்டி, பகத் வர்மா, சி ஹரி நிஷாந்த்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ் ஆடம் ஜாம்பா, தேவதூத் பாடிக்கல், கேன் ரிச்சர்ட்சன், முகமது சிராஜ், நவ்தீப் சைனி, பவன் தேஷ்பாண்டே, ஷாபாஸ் அகமது, எம்.எஸ். ரஜத் பாட்டீதர், முகமது அசாருதீன், கைல் ஜேமீசன், டான் கிறிஸ்டியன், சுயாஷ் பிரபுதேசாய், கே.எஸ்.பாரத், ஃபின் ஆலன்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR