புது டெல்லி: அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

190 ரன்கள் எடுத்தால், வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்ப முதலே அதிரடியில் இறங்கியது. 17.3 ஓவரில் மூன்று விக்கெட் மட்டுமே இழந்து 190 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) தொடக்க வீரர் யஷாஸ்வி ஜெய்ஸ்வால், சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை தெறிக்கவிட்டார். இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) தொடரில் 19 பந்துகளில் தனது முதல் அரைசதத்தை நம்பிக்கை பூர்த்தி செய்தார். 


2018 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 17 பந்துகளில் அரை சதம் அடித்த இஷான் கிஷான் சாதனைகளுக்குப் பிறகு, குறைந்த பந்தில் அரைசதம் அடித்த இரண்டாவது இந்திய வீரராக என்ற பெருமையை யஷாஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.


ஆனால் இதுவரை நடைபெற்ற முழு ஐபிஎல் போட்டியை பார்த்தால், 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஜோஸ் பட்லரின் 18 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். அப்போது அவர் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிக்கொண்டு இருந்தார். தற்போது அதே அணியை சேர்ந்த இரண்டாவது வீரராக யஷாஸ்வி ஜெய்ஸ்வால் விரைவான அரைசாதமாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR