பேரனுக்கு வாழ்த்துக்கள்.. மகனுடன் பைனல்.. கலாய்த்த சேவாக்!!
நேற்று நடைபெற்று 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதின. இந்த போட்டியில் இந்தியா வங்காளதேசத்தை ஊதித் தள்ளியது.
இதுகுறித்து அதிரடி வீரர் சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து உள்ளார். அதாவது, ஒரே வீட்டில் நடக்கும் சண்டையில் அரையிறுதி வரை வந்த சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேராண்டி, இனி அப்பாக்கள் தினத்தில் மகனுடன் பைனல் மிச்சமுள்ளது. இதை சீரியஷாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் இருந்து பிரிந்த நாடுகளான பாகிஸ்தானை மகன் என்றும் பாகிஸ்தானில் இருந்து பிரிந்த நாடான வங்கதேசத்தை பேரன் என்றும் சேவாக் கலாய்த்து உள்ளார்.