21வது Common Wealth Game போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டு கோஸ்ட் நகரில் (நாளை) ஏப்ரல் 4-ம் தேதி துவங்கி ஏப்ரல் 15-ம் நாள் வரை நடைபெறவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த போட்டியில் இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 17 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது.


இந்நிலையில் Common Wealth Game போட்டியில் சாய்னா நேவால் தந்தை ஹர்வர்சிங் நேவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவருடன் அவரது தந்தையை தங்க போட்டி அமைப்பாளர்கள் அனுமதிக்கவில்லை.


காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் தொடக்க விழாவில் பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார். ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் போட்டி 5-வது முறையாக நடக்கிறது. 


இந்த நிலையில், இது குறித்து பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் தனது டிவிட்டரில்,


2018 Common Wealth Game-ல் பங்கேற்கும் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த என் தந்தையின் பெயர் இடம் பெறாதது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. போட்டியில் என் தந்தை பங்கேற்பதற்கான முழு கட்டணத்தையும் நான் செலுத்தி உள்ளேன். ஆனால், உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறாததால், அவர் போட்டியை காண முடியாது. மேலும், அவரலால் என்னுடன் தங்கவும் முடியாது. 



 


எனக்கு அவரது ஆதரவு தேவை. ஆனால், எதற்காக என் தந்தை போட்டியில் பங்கேற்க முடியாது என்பதை என்னிடம் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்பது தான் எனக்கு புரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


 



 


இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் IOA - Team India சாய்னா நேவால் டிவிட்டுக்கு பதிலளித்துள்ளது. அதில்,