ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு மெகா ஏலம் நடைபெற்ற நிலையில், அடுத்தாண்டு தொடரை முன்னிட்டு தற்போது மினி-ஏலம் நடத்தப்படும்.  வரும் டிசம்பர் 16ஆம்தேதி, பெங்களூரு அல்லது இஸ்தான்புல் நகரில் இந்த மினி ஏலத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைத்தொடர்ந்து, 10 அணிகளும் வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் தங்களின் யாரையெல்லாம் தக்கவைக்கப்போகிறார்கள், வெளியேற்றப்போகிறார்ககள் என்பதை முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என தெரிவித்திருந்துள்ளது. 


இன்னும் ஒரு வாரமே இருப்பதால், அனைத்து அணிகளும் ஏலத்திற்கு முழு மூச்சாக தயாராகி வருகின்றன. இந்நிலையில், அணிகள் எந்த வீரரை தக்கவைக்கிறது, வெளியேற்றுகிறது என்பது குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி வருகின்றன. இதில், அதிர்ச்சியளிக்கும் வகையில் பல்வேறு முன்னணி வீரர்களும் தங்களின் அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் படிக்க | இந்த 5 வீரர்களுக்காக அடித்துக்கொள்ளும் MI மற்றும் CSK! யார் அவர்கள்?


குறிப்பாக, மும்பை அணியில் இருந்து கைரன் பொல்லார்ட் விடுவிக்கப்படுவார் என கூறப்படுகிறது. அவர் வரும் தொடரில் பங்கேற்க வாய்ப்பு குறைவு என்பதால் அவரை விடுவிக்க மும்பை இந்தியன்ஸ் அணி முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 


அந்த வகையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 வீரர்களை வெளியேற்ற உள்ளதாகவும், அதில் ஷர்துல் தாக்கூரும் ஒருவர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மெகா ஏலத்தில் ரூ. 10.25 கோடி கொடுத்து, ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை எடுத்த டெல்லி அணி, ஒரு தொடரிலேயே அவரை விடுவிக்க முடிவெடுத்துள்ளது. https://zeenews.india.com/tamil/topics/Dhoni


கடந்த சீசன்களில் சென்னை அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வந்த ஷர்துல், 2022 சீசனில் டெல்லி அணிக்கு எதிர்பார்த்த பெர்மாமன்ஸை அளிக்கவில்லை. குறிப்பாக, ஆல்-ரவுண்டரான அவர் 15 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால், அவரின் எகனாமி ரேட் 9.79 ஆக இருந்ததுதான் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஒவ்வொரு போட்டிக்கும் அவர் டெல்லி அணிக்கு ரன்களை வாரி வழங்கி வந்தார். பேட்டிங்கிலும், அவர் 15 ரன்கள் சராசரியுடன் மொத்தம் 120 ரன்களை மட்டும் குவித்திருந்தார். இதுதான் அவரை டெல்லி அணி விடுவிக்க காரணம் என கூறப்படுகிறது.


இந்நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி சென்னை அணி மீண்டும் ஷர்துல் தாக்கூரை அணியில் எடுக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சென்னை தரப்பில் ஜெகதீசன் நாராயணன், கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, மிட்செல் சாட்னர் ஆகியோர் விடுவிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு ஆகியோர் ஓய்வுப்பெற்றுள்ளதால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள். https://zeenews.india.com/tamil/topics/CSK


இதனால், அணிக்கு மீண்டும் ஒரு ஆல்-ரவுண்டரை, அதுவும் தோனி பட்டரையில் கூர்தீட்டப்பட்ட ஷர்துல் தாக்கூரை கைப்பற்றவே சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் விரும்பும். மின் ஏலத்தில் வரும் முன்னணி வீரர்களான சாம் கரன், பென் ஸ்டோக்ஸ், கேம்ரூன் க்ரீன் போன்றோரை எடுக்க போட்டாபோட்டி நடைபெறும் நிலையில், ஷர்துல் தாக்கூர் தனித்துவிடப்பட வாய்ப்புகள் அதிகம். எனவே, அவரை கொக்கிப்போட்டு தூக்க சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர் இந்திய வீரர் என்பதால் கூடுதல் நன்மைக்கும் கிடைக்கும்.


மேலும் படிக்க | Video : நடிகையை வைத்து ரிஷப் பண்டை கலாய்த்த ரசிகர்... கொந்தளிக்கும் ட்விட்டர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ