இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி அண்மைக்காலமாக ஃபார்ம் அவுட்டில் தவித்து வருகிறார். டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி என அனைத்திலும் மிக சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து வரும் அவர் தொடர்ந்து அணியில் இருப்பது இளம் வீரர்களுக்கான வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் விராட் கோலி ஒரு போட்டியில் கூட குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. முதல் போட்டியில் அவருக்கு ஒய்வளிக்கப்பட்டிருந்தபோது, தீபக்ஹூடா உள்ளிட்டோர் இந்திய அணிக்காக களமிறங்கினர். அந்தப் போட்டியில் தீபக்ஹூடா சிறப்பாக விளையாடினார். அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பாண்டிங் சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழையும் ரோகித் சர்மா


ஆனால் இரண்டாவது 20 ஓவர் போட்டியில் திடீரென இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட தீபக்ஹூடாவுக்கு பதிலாக விராட் கோலி களமிறக்கப்பட்டார். வெறும் பெயருக்காக சேர்க்கப்பட்ட அவர், எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஃபார்மில் இருக்கும் தீபக் ஹூடாவை வெளியில் உட்கார வைத்துவிட்டு, ஃபார்ம் அவுட்டில் இருக்கும் விராட் கோலியை அணியில் சேர்த்திருப்பது குறித்து பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். 


இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக்பாண்டியா தலைமையிலான இந்திய அணி பங்கேற்றது. அந்தப் தொடரில் முதல் போட்டியில் 47 ரன்கள் விளாசிய தீபக்ஹூடா, அடுத்த போட்டியில் அபாரமாக விளையாடி 104 ரன்கள் குவித்து அசத்தினார். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் 17 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார். அவரை வெளியில் உட்கார வைத்துவிட்டு மூத்த வீரர் என்ற ஒரே காரணத்துக்காக விராட் கோலியை அணியில் வைத்திருப்பது நியாயமா? என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்றாலும், அவருக்கு போதுமான ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டு வாய்ப்பு கொடுக்கலாம். அதற்காக ஃபார்ம் அவுட்டில் இருக்கும்போது தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பது என்ன வகையில் நியாயம்? என்றும் விமர்சித்துள்ளனர்.


மேலும் படிக்க | இந்திய வீரர்களை திடீர் விசிட் அடித்த தோனி! வைரலாகும் புகைப்படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR