உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில், ஜெர்மனி அணி 0-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு, 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக முதல் சுற்றுடன் வெளியேறியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

FIFA உலக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஸ்யாவில் நடைப்பெற்று வருகிறது. 32 நாடுகளின் அணிகள் கலந்துக் கொள்ளும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டியானது 64 ஆட்டங்களாக நடைபெறுகிறது. 


இந்த போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் ‘எப்’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி அணி, ஆசிய கண்டத்தை சேர்ந்த தென்கொரியா அணிகள் மோதின. இதில், 0-2 என்ற கோல் கணக்கில்  ஜெர்மனி அணியை வீழ்த்தி தென்கொரியா அணி வெற்றி பெற்றுள்ளது.