ஷிகர் தவான் அதிரடி ஆட்டத்தால் டெல்லி கேப்பிடல்ஸ் 147 ரன்கள் குவிப்பு!
டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது!
டெல்லி கேப்பிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது!
IPL 2019 தொடரின் 5-வது லீக் ஆட்டம் இன்று டெல்லி பெரோஷ் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இப்போடியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்க வீரராக களமிறங்கிய பிரத்திவி ஷா 24(16), ஷிகர் தவான் 51(47) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து களமிறங்கிய அணித்தலைவர் ஸ்ரேயஸ் ஐயர் 18(20), ரிஷாப் பன்ட் 25(13), இன்கிராம் 2(2) என அடுத்தடுத்து வெளியேறினர்.
இதனால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்துள்ளது.
சென்னை அணி தரப்பில் டெயின் பிராவோ 3 விக்கெட் வீழ்த்தினார். தீபக் சாஹர், ஜடேஜா மற்றும் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 148 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது.